செங்கோட்டையில் தூக்குப்போட்டு பால் வியாபாரி தற்கொலை

மகேஷ்வரிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்தது.முருகன் திடீரென ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டையில் தூக்குப்போட்டு பால் வியாபாரி தற்கொலை
Published on

நெல்லை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வண்டி மலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருத்தபாண்டி. இவரது மகன் முருகன்(வயது 29). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

தற்கொலை

இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு 2-வது குழந்தை பிறந்தது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த அந்த பிரசவத்தின்போது திடீரென மகேஷ்வரி இறந்துவிட்டார். இதனால் முருகன் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் சரிவர தொழிலையும் கவனிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று செங்கோட்டை போலீஸ் நிலையத்தின் மேல்புறம் உள்ள ஆலமரத்தில் திடீரென முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com