என் மலர்
விருதுநகர்
- ஊழல் வழக்கில் சிக்கிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
- உலகம் முழுவதும் காவல்துறை என்பது ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்துவார்கள்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மாரி யப்பன் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் மேரி, பாலமஸ்தான் முன்னிலை வகித்தனர். முருகானந்தம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட செயலா ளர் அர்ஜுனன், ஜோதி லட்சுமி, கட்சியின் மூத்த உறுப்பினர் கணேசன் ஆகி யோர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எம்.ஏ.வு மான பாலபாரதி சிறப்புரை யாற்றினார். அவர் பேசிய தாவது:-
உலகம் முழுவதும் காவல்துறை என்பது ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்து வார்கள். அவர்களுக்கு எதி ராக போராட்டம் நடத்துவது தான் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இருக்கும். ஆனால் இங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு அனுமதி மறுத்து பின்னர் அனுமதி கொடுத்து உள்ளனர். காரணம் என்ன என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
மகளிருக்கான மசோதா 1966-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 27 ஆண்டு களுக்கு பின்னால் இப்போது தூசி தட்டி எடுத்து பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் பெரும் பரபரப்பு டன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா 2024 தேர்தலில் செயல்படுத்தப்ப டாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி வரையறை செய்து, ஓபிசி, பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் வரை யறை முடிந்து 2029-ல் மசோதா சட்டமாக்கி வரும்.
தென்னிந்தியாவில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் அரசியல் நடை பெற்று வருகிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நடை பயணத்தின் போதும் பணம் கொடுத்து தொண்டர் களை விலைக்கு வாங்கி கூட்டம் சேர்த்து வருகிறார்.
தற்போது அதிமுக- பா.ஜனதா இடையே குழா யடி சண்டை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கைகட்டி பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்து கேட்டு வந்தது. இப்போது நிலை என்ன? அவர்கள் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது.
தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஆனால் குட்கா, புகையிலை போன்ற ஊழல் வழக்கில் தொடர்புடைய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் வெளியே சுதந்திரமாக உள்ளனர். என்ன இது நியா யம்? மத்திய பா.ஜனதா அரசில் காப்பீடு ஊழல், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.
இவ்வாறு அவர் பேசி னார்.
- 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக அவரது உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவ லர் சந்தனமாரி. இவருக்கு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சந்தனமாரி அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுமிக்கும், பாலையம் பட்டி முத்தரையர் நகர் பகுதியை சேர்ந்த உறவினர் இளங்கோவன் (24) என்பவ ருக்கும் பழக்கம் இருந்ததாக வும், தான் உறவினர் வீட்டுக்கு பாலையம் பட்டிக்கு செல்லும்போது அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக் காக அழைத்து சென்றிருந்த னர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர்கள் அடுத்த மாதம் வரும்படி கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி வந்துள்ளது. இதை யடுத்து பெற்றோர் சிறு மியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் செய்தார்.
போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- அழகம்மாள் தனியாக வசித்து வந்தார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 75), தனியாக வசித்து வந்தார். இவரது 2-வது மகன் ஆறுமுகம்(42) திருமணம் செய்யாமல் ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து அழகம்மாள் மயங்கி கிடந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரியாபட்டி அருகே பால் விற்பனையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
- அவர் மனவிரக்தியுடன் காணப்பட்டார்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள டி.செட்டிக்குளத்தை சேர்ந்தவர் சபரிமுருகன். தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு பால் விற்பதற்காக சென்றார்.
இந்த நிலையில் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் விடுதி அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சபரிமுருகனின் சகோதரர் முருகபாண்டி புகார் கொடுத்தார்.
அதில், கடந்த சில நாட்களாக சபரிமுருகன் ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்ததாகவும், மனவிரக்தியுடன் காணப்பட்டதாகவும் கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
- அருப்புக்கோட்டை வழித்தடத்தில் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தெற்கு ரெயில்வே கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணா மலை விருதுநகர் வந்தபோது அந்த திட்டம் நிறைவேற்றப் படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர் பணீந்திர ரெட்டி விருதுநகர், மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டம் காரி யாபட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் 77 எக்டேர், மதுரை மாவட்டம் கள்ளிக் குடி, திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதிகளில் 15 எக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட் டத்தில் 52 வருவாய்த்துறை அலுவலர்கள், தனி தாசில்தார்கள், மதுரை மாவட்டத்தில் 26 வரு வாய்த்துறை அலுவலர்கள், தனிதாசில்தார்கள் உள்பட 78 பேர் நியமனம் செய் யப்பட உள்ளனர். இவர்க ளுக்கான ஊதியம் மற்றும் இதர செலவினங்களை தெற்கு ரெயில்வே தமிழக அரசுக்கு வழங்கும்.
எனவே இந்த திட்டத் திற்கான நடவடிக்கைகளை உடனடியாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
- இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாத்தூர்:
மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா (11) என்ற மகளும், காளிமுத்து (9) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தபோதிலும் பிள்ளைகள் இருவரும் தாய் ஜெயலட்சுமியின் பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் திருச்சிக்கு செல்வதில் விருப்பமின்றி இருந்துள்ளார். தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஜெயலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை ஜெயலட்சுமி தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நேராக அந்த பகுதியில் உள்ள தேனூர் தண்டவாள பகுதிக்கு சென்றார். திடீரென்று அந்த வழியாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இண்டர்சிட்டி ரெயில் முன்பு குழந்தைகளின் கைகளை பிடித்துக்கொண்டு பாய்ந்தார். ரெயில் மோதிய வேகத்தில் 3 பேரின் உடல்களும் துண்டு, துண்டாக சிதறியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (47) என்பவருடன், ரெயில்வே போலீசாக வேலை பார்த்த ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த சுப்புராஜூக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சுப்புராஜ், ஜெயலட்சுமி தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அதேபோல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்த சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாறுதலாகி சென்றார். ஆனாலும் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை. 6 ஆண்டுகளாக அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது மனைவியும் தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
இதனால் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதன் மூலம் அவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து வெட்ட வெளிச்சமானது. கணவரை பிரிந்ததாலும், தனது கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மாலை ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று இரவு கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் சென்றுள்ளார். சாத்தூர்-நல்லி ஊருக்கு இடையே உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜோதிடர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன்(37), ஜோதிடர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வெளியூர் செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவி னர்கள் தேடிப்பார்த்தபோது பந்தல்குடி ரேசன் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி தாமரை கனி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே பள்ளத்துப்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(28). இவரது மனைவி முத்து செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி றது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவையொருவர் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முத்துசெல்வி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவர் அங்கு சென்று பார்த்தபோது போலீசில் புகார் செய்ய உள்ளதாக மனைவி கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.
கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.
ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராம்கோ பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.
- முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 4-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, தளவாய்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி , விருதுநகர் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி, மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்குப் பணியாளர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறதொடர்பு பணியாளர் முத்துலட்சுமி , விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கோபு, ஏட்டு பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.
- சாம்பல் நிற அணில்கள் சரணாலய அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
- ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், துணை இயக்குனர் அலுவலகத்தில் ராம்கோ சமூக கூட்டாண்மை சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலய அபிவிருத்தி மற்றும் மயில்கள் பாது காப்பு அபிவிருத்திக்காக ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சத்திற்கான வரை வோலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.
ராம்கோ நிறுவனம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் சாம்பல் நிற அணில்கள் மற்றும் மயில்கள் பாதுகாப்பு அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் ராம்கோசிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக கூட்டாண்மை சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வரை வோலையை நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் (பணிகள்) கண்ணன், மூத்த துணை பொதுமேலாளர், (சுரங்கம்) சரவணன் ஆகியோர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளர் பெரிய கருப்பனிடம் வழங்கினார். அருகில் வனச்சரக அலுவலர் செல்லமணி, உயிரியிலாளர் பார்த்தீபன், ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி கிருத்விக்(4) என்ற மகன் உள்ளார். கோபாலகிருஷ்ணன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சொந்த ஊரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மனைவி, குழந்தையை அனுப்பி வைத்தார். விசேஷம் முடிந்த பின்பு அவர்களை கோபால கிருஷ்ணனின் உறவினர் திருச்சிக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் முத்துலட்சுமி திருச்சி செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் குமாரலிங்க புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (28), மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ஆமத்தூர் போலீசில் அவரது தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
- சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.
இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.






