நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா

காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது.இந்த விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது.
நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெங்கட்ராமன் முன்னிைல வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் தென்காசி டாக்டர் சங்கரகுமார் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு இலவச சேலைகளும், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். விழாவில் மாணவர் காங்கிரஸ் மாநில அமைப்பாளர் சீமான் ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற இளைஞரணி தலைவர் மனோஜ் குமார், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராமர், மாவட்ட மாவட்ட துணைத்தலைவர் பாண்டி செல்வம், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பூங்கொடி, ராஜபாளையம் வட்டார துணைத்தலைவர் சின்னத்தம்பி , பகவதி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர்களின் யூனியன் வட்டார தலைவி கற்பக கனி, துணைத்தலைவி ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com