search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandebharat Rail"

    • வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விருதுநகர்

    இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.

    நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

    வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.

    இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×