search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைவில் முன்பதிவு இல்லாத சாதாரண வந்தே பாரத் ரெயில்: இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டம்
    X

    விரைவில் முன்பதிவு இல்லாத சாதாரண வந்தே பாரத் ரெயில்: இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டம்

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×