விழிப்புணர்வு நிகழ்ச்சி

காளீஸ்வரி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பாக குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2-ம் ஆண்டு மாணவர் ராகவன் வரவேற்றார். இதில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த விளக்கமும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் 2ம் ஆண்டு மாணவர் சிவசுப்பரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com