என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manickam Tagore MP"

    • தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது.

    பீகார் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி இமாலய வெற்றியை ருசித்து உள்ளது.

    அதே நேரம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது தவறு என்ற குரல் அங்கும் ஒலிக்கிறது.

    அடுத்ததாக தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் கூட்டணி வியூகம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும். கடைசியில் சமாதானமாகி விடுவார்கள்.

    கடந்த காலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

    ஆனால் வருகிற தேர்தலில் 25 தொகுதிகளை ஏற்கமாட்டோம். கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம் என்று காங்கிரசார் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.

    பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தமிழகத்தில் காங்கிரஸ் எந்த மாதிரி முடிவுகளை மேற்கொள்ளும் என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

    பீகாரில் எஸ்.ஐ.ஆரால் பா.ஜ.க வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள்.

    இதை தேர்தல் ஆணையம் சிஸ்டமேடிக்காக செய்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    பல மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்தது பா.ஜ.க. அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காக 2021-ல் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

    கூட்டணி முடிவு, கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற முடிவுகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற குழு பரிந்துரை குறித்து அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. ராகுல் காந்தி நடைப்பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

    108 நாட்கள் 2,800 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான். ஆனால் இதுபற்றி அண்ணாமலை பேசியுள்ளது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ராகுல்காந்தியுடன் கமல்ஹாசனும் சித்தாந்த அடிப்படையில் ஒரே பார்வை கொண்டவர்கள்.

    இதனால் தேர்தல் கூட்டணி ஏற்படுமா? என்று இப்போது சொல்ல முடியாது. ராகுல் காந்திக்கு நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம். மற்ற தலைவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றி கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வடமலைக்குறிச்சியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதிராஜசேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறி உள்ளார்.
    • 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட் டியில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை மாணிக் கம் தாகூர் எம்.பி. பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு–கிறது. விருதுநகர் மாவட்டத் தில் 300 கிராமங்களிலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 382 கிராமங்க–ளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.

    90 சதவீதம் பேர் பணி களை செய்து வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்க்கிறது. கடந்த 5 வாரங்களாக ஊதியம் வழங் கப்படாத நிலை நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் புகார் இருந்தால் என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுத் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட் களாக உயர்த்த வேண்டும்.

    கப்பலூர் சுங்கச்சாவடி யில் ஆண்டுக்கு 41 லட்சம் வாகனங்கள் செல்லும் நிலை யில் 10 லட்சம் வாக னங்கள் வி.ஐ.பி. வாகனங்க ளாக கணக்கு காட்டப்பட்டுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 வசூல் என்றாலும் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண் டருக்கு மத்திய அரசு ரூ.1200 வாங்கி வந்த நிலை யில் தற்போது ரூ.200 குறைத் துள்ளது. இதுதேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கை. மக்கள் மீது அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை இதுகுறித்து பிரதம ரிடம் முறையிட வேண்டும். தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அதிக தொகை செலுத்தும் மாநி லங்களில் தமிழகம் 5-வது இடத்தில் வருகிறது. இதில் எந்த அளவிற்கு தமிழ கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடந்த தீ விபத்து ரெயில்வே துறையின் அலட் சியத்தை காட்டுகிறது. ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டரை எப்படி அனும தித்தார்கள் என்று தெரிய வில்லை. ரெயில்வே மந்திரி ரெயில் விபத்திற்கு பொறுப் பேற்று பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சாத்தூர் யூனியன் சின்னகொல்லப் பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    • விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரெயில் பாதை திட்டம் பல்லாயிரக்கானக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளும் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய ரெயில் போக்குவரத்து திட்டம் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு ரூ.360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை திடீரென்று முடக்கி தென் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படவே இல்லை.

    ஏற்கனவே இருந்த குறுகிய ரெயில் பாதையை அகலப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடங்கிய ரெயில் பாதை திட்டங்களை கூட, தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்த திட்டங்களைக் கூட இன்று வரை நிறை வேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாட்டை குறிப்பாக விருதுநகர் தொகுதியை பாரதீயஜனதா அரசு திட்டமிட்டு புறக்க ணிப்பதுடன் வஞ்சித்தும் வருகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    இந்த திட்டத்திற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் வகை யிலான இத்திட்டத்தை முடக்கியத்தின் மூலம் இப்பகுதி மக்களை ஏமாற்றி விட்டது மோடி அரசு. திட்டங்களை நிறை வேற்றாமல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் சுய வெளிச்சம் பெறுவதற்கா கவும், அதானிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட கைவிடப்பட்ட இந்த திட்டம் நிச்சயம் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையில் அமையும் புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 'இந்து மீல்ஸ்', ‘இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன?
    • ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா?

    ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு பட்டியலில் 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு ப்ளேடு இருந்ததாக வந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இந்திய விமான போக்குவரத்துத்துறை ஏன் அமைதியாக உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

    ×