ஏர் இந்தியா விமானத்தில் 'இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ்': எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

'இந்து மீல்ஸ்', ‘இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா?
ஏர் இந்தியா விமானத்தில் 'இந்து மீல்ஸ், முஸ்லிம் மீல்ஸ்': எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்
Published on

ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு பட்டியலில் 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு ப்ளேடு இருந்ததாக வந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இந்திய விமான போக்குவரத்துத்துறை ஏன் அமைதியாக உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com