என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்று நீரை இறைக்க பயன்படும் துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டி யில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு வகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவை யான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோவில் அருகில் வெட்டப்பட்டுள் ளவை திருமஞ்சனக் கிணறு கள் என்றும், வழிப்பாதை களில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.
இந்நிலையில் ராமநாதபு ரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட் டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோவில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெ டுத்து படித்து ஆய்வு செய்த னர். இதுபற்றி ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-
பாட்டக்குளம் சல்லிப் பட்டி ஸ்ரீபாலாண்டி அய்ய னார் கோவில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் "ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோற னான விசைய கங்கர் செய்தது உ" என எழுதப்பட் டுள்ளது. இக்கோவில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத் துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியா ளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டி ருக்கலாம்.
இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்த ரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது. மேலும் விருதுந கரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லி புத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகசேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.
கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவி யுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- இந்த விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெங்கட்ராமன் முன்னிைல வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் தென்காசி டாக்டர் சங்கரகுமார் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு இலவச சேலைகளும், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். விழாவில் மாணவர் காங்கிரஸ் மாநில அமைப்பாளர் சீமான் ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற இளைஞரணி தலைவர் மனோஜ் குமார், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராமர், மாவட்ட மாவட்ட துணைத்தலைவர் பாண்டி செல்வம், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பூங்கொடி, ராஜபாளையம் வட்டார துணைத்தலைவர் சின்னத்தம்பி , பகவதி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர்களின் யூனியன் வட்டார தலைவி கற்பக கனி, துணைத்தலைவி ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
- 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங் குல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உத வித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமருமி டத்திற்குச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந் தப்பட்ட துறை அலுவலர்க ளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மினி டைரி தொழில், ஆடு வளர்ப்பு தொழில்களுக்காக 33 பயனாளிகளுக்கு ரூ.26.90 இலட்சம் மானியத்தொ கைக்கான காசோலைக ளையும், மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்க ளையும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித் தணை ஆட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் கூடு தல் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
- எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர்:
மானாமதுரையில் இருந்து விருதுநகர் மாவட் டம் புலியூரான் கிராமத்திற்கு இடையே செல்லும் ரெயில் தண்டவாள பகுதியில் தொட்டியங்குளம் என்ற இடத்தில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. மாறாக அவரது உடலில் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.
இதையடுத்து ரெயில்வே போலீசார் விருதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் போலீசார் வந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
இறந்து கிடந்தவர் சிவப்பு நிற சட்டை, பனியன் மற்றும் கைலி அணிந்திருந்தார். சம்பவம் தொடர்பாக புலி யூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானிதேவி விசாரணை நடத்தி புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையுண்டவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பாக குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2-ம் ஆண்டு மாணவர் ராகவன் வரவேற்றார். இதில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த விளக்கமும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் 2ம் ஆண்டு மாணவர் சிவசுப்பரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.
- விருதுநகர் தொகுதியை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரெயில் பாதை திட்டம் பல்லாயிரக்கானக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளும் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய ரெயில் போக்குவரத்து திட்டம் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு ரூ.360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை திடீரென்று முடக்கி தென் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்து 9 ஆண்டுகளில் தென் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படவே இல்லை.
ஏற்கனவே இருந்த குறுகிய ரெயில் பாதையை அகலப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டியது. ஏற்கனவே காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடங்கிய ரெயில் பாதை திட்டங்களை கூட, தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்த திட்டங்களைக் கூட இன்று வரை நிறை வேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழ்நாட்டை குறிப்பாக விருதுநகர் தொகுதியை பாரதீயஜனதா அரசு திட்டமிட்டு புறக்க ணிப்பதுடன் வஞ்சித்தும் வருகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இந்த திட்டத்திற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பல வகைகளில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் வகை யிலான இத்திட்டத்தை முடக்கியத்தின் மூலம் இப்பகுதி மக்களை ஏமாற்றி விட்டது மோடி அரசு. திட்டங்களை நிறை வேற்றாமல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் சுய வெளிச்சம் பெறுவதற்கா கவும், அதானிக்காகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட கைவிடப்பட்ட இந்த திட்டம் நிச்சயம் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையில் அமையும் புதிய அரசு விரைவாக உறுதியாக நிறைவேற்றும் என்பதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூர் கிராமத்தில் ஆர்பர் தினம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் மற்றும் ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து மரக் கன்றுகளை நட்டனர்.
தமிழகத்தில் 21 சதவிகிதம் பசுமை பரப்பு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பசுமை தமிழகம் இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை யாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது சுமார் 6.5 சத விகிதம் பசுமை பரப்பளவு உள்ளது. அதனை அதி கரிக்கும் வகையில் வனத் துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகள் நடு வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இத்திட் டத்தின் மூலம் விவசாயி களுக்கு பருவ மழை காலத்தில் நடவு செய்ய தேக்கு மகாகனி வேம்பு நெல்லி வேங்கை புங்கை பூவரசு மலை வேம்பு உள்ளிட்ட கன்றுகள் நாற்றங் கால்களில் தயார் நிலையில் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக குன்னூர் கிராமத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர் கள், தன்னார்வ அமைப்பு கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.
- வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
- விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விருதுநகர்
இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.
நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.
வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.
இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.
- ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம் நடந்தது.
- வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத்துறை ஏற்பாடு செய்த நாடகக் காட்சியை காணச் சென்றனர். ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தல்லோ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறந்த கலைநயத்துடனும், பாவனைகளுட னும் தங்களது கதாபாத்திரத்திற்கான உடை மற்றும் அணி கலன் உதவியுடன் நாடகத்தினை மிகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் விளக்கினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி சார்பாக 61 ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முனைவர் பவுமினா, துறைத்தலைவர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் அர்ச்சனா தேவி, வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.
- கல்லூரி மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது 17 வயது மகள் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் கூறி உள்ளார். படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்றார். ஆனால் வரவில்லை என கல்லூரியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெற்றோரும், காதலர் கார்த்திக்கும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- பெண் போலீசை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.
விருதுநகர்
சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கற்பகலட்சுமி(34).இவர் ஓ.மேட்டுப்பட்டியில் நடந்த விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். அங்கு இவர் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது ஒரு வாலிபர் வீடியோ எடுத்து அவரை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில் இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் கற்பகலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.
- மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.
அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.






