என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Congress"

    • ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் உள்ள இஸ்மாயில்கான் கோரி வகையறாவுக்கு பாத்தியத்திற்கு உட்பட்ட டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் அகில இந்திய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் 2 நாட்கள் நடந்தது.

    இந்த முகாமிற்கு காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாவட்ட பொது செயலாளரும், கோரி மருத்துவ நல மையத்தின் மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    காங்கிரஸ் நகர தலைவர் சங்கர் கணேஷ், அகில இந்திய சட்டா உரிமை கழகம் இமாம்ஷா, எச்.பி. கேஸ் அழகுராஜா, அப்துல் பஷீர் ரகுமான், நகர் மன்ற உறுப்பினர் ரபிக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் கலந்து கொண்டார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு மூட்டு மற்றும் கழுத்து, இடுப்பு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சையது இஸ்மாயில் சித்திக் செய்திருந்தார்.

    ×