என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அருப்புக்கோட்டை அருகே வாலிபர்-நர்சு மாயமானார்கள்.
    • ஆவியூர், வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மனைவி வேலைக்கு செல்லுமாறு பிரபாகரனிடம் கூறி யுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதைத்தொடர்ந்து அவரது தந்தை சந்திரன் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீரசோழன் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகள் மீனாள்(20). நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மீனா ஊருக்கு வந்தார். பெற்றோர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மகள் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார்? என கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு வீரசோழன் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஏமாற்றி வாலிபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.தொட்டியங்குளம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவருக்கு குறிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகி விட்டதாகவும், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவ தாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதனால் இருவரும் நெருங்கிப் பழக தொடங்கி னர். இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீரபிரபு பலமுறை அங்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் 4 மாத கர்ப்பிணியானார்.

    இதை யடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீரபிரபுவை வற்புறுத்தி னார். ஆனால் அவர் பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் வீரபிரபு குறித்து விசாரித்துள்ளார். அதில், வீரபிரபு தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும், மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டா் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ்குமார், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை செய் யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலு வலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நலனை கருத் தில் கொண்டு அனைத்து கட்சிகளும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவுப் படி தண்ணீரை திறந்து விடும் நிலையில் அங்குள்ள பா.ஜ.க. முன்னாள் முதல் வர்கள், சிலரை தூண்டி விட்டு பிரச்சினையை பெரி தாக்குகிறார்கள். காங்கிரசை பொருத்த மட்டில் மத்திய மந்திரியிடம் தமிழக மக்களின் நலனை காக்க வேண்டும் என ஜோதி மணி எம்.பி. தலை மையில் மனு கொடுத்துள்ளோம். 2 மாநிலங்களிலும் முதல்வர் களை தரம் தாழ்ந்து விமர் சிப்பதை தவிர்க்க வேண் டும். நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    2016-ல் இருந்து தொட ரும் அ.தி.மு.க., பா.ஜனதா உறவு முறிந்து விட்டதாக கூறினாலும் அவர்கள் பிர தமர் வேட்பாளராக மோடியை தான் தெரிவிப்பார்கள். இந்தியா கூட்ட ணியை பொருத்த மட்டில் பிரதமர் வேட்பாளர் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தவிர்க்கப் பட வேண்டியவை என கூறி வரும் சீமான் தான், தவிர்க்கப்பட வேண்டியவர்.

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட் டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தேசிய தலை வர் முடிவு செய்வார். விரு துநகர் மாவட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பேர் தொடர்ந்து இணைப்புகள் பெறவில்லை என தெரிவிக் கப்பட்டது.

    விருதுநகர் வடமலை குறிச்சி விலக்கில் சர்வீஸ் சாலை, கலெக்டர் அலுவல கம் முன்பு மேம்பாலம் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்க தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. சாத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.
    • அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

    சிவகாசி

    விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகி களை நியனம் செய்துள்ளார்.

    அதன்படி அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக எஸ்.என்.பாபுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பலராம் நியமிக்கப்பட்டு உள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பிலிப்வாசு, மாவட்ட மாணவரணி செய லாளராக ராஜபாளையம் ராஜ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளராக என்.சி.ஓ.காலனி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினராக ராஜபாளையம் ஜான்சன், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராக சையது சுல்தான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்களாக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட விவசாய பிரிவு பொருளா ளராக ராஜபாளையம் சவுந்தரராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக திருத்தங்கள்

    முருகேசன். பழனிமுரு கன். ராஜபாளையம் பால சுப்பிரமணியராஜா. சிவகாசி எஸ்.புதுப்பட்டி ஈஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளராக செண்பக வேல், காசிராஜ், கருப்பசாமி, காமராஜ், பழனிவேல், சோலைமலை, குருசாமி, மாவட்ட பொரு ளாளராக கோட்டைபாண்டி. மாவட்ட புரட்சி தலைவி பேரவை தலைவராக கமல்குமார், துணைத்தலைவராக காசி, மாவட்ட இணைச் செயலா ளராக முத்துக்குமார், மணி கண்டன், மாவட்ட துணைச் செயலாளராக தங்கப் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர்களாக சரவணன், தினேஷ்பாபு, இணைச் செயலாளராக சிவா, மாவட்ட பொருளாள ராக வடிவேல் சித்தன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராக ராஜ பாளையம் சுபா, துணைச் செயலாளராக ராஜபாளை யம் கனகலட்சுமி. விஜயா, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளராக ஜெயராம், கவுதமன், மாவட்ட பொருளாளராக மாரிக்கனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக லாசர் இணைச் செயலாளராக முருகன் துணைச் செயலா ளராக குமார், வெள்ளிராஜ், மாவட்ட பொருளாளராக வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக வெற்றி, கலைச்செல்வி, மாவட்ட சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு துணைத் தலைவர்க ளாக மிக்கேல் ராஜ், சாகுல் ஹமீது, இணைச் செயலா ளர்களாக முகமது ஆசிமிக்கேல் ராஜ், துணைச் செயலாளர் ஜலில் முகமது காலிப். மாவட்ட பொரு ளாளராக ஹிதாயத்துல்லா, மாவட்ட இலக்கிய அணி தலைவராக மரியதாஸ் இ ணைச் செயலாளராக செந்தில்குமரன் துணை செயலாளராக ராஜேஷ் கண்ணா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவராக ஞானகிரி மாவட்ட பொரு ளாளராக முத்துவிஜயன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக விக்னேஷ் துணைச் செயலா ளராக பிறபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக மாயாண்டி இணை செய லாளராக பேச்சிமுத்து, துணை செயலாளராக வல்லவராஜா, ஜெஸ்வந்த் ராவ், கணேசன், கருப்பசாமி, செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக ராமசுப்பிர மணியன் மாவட்டத் துணைச் செயலாளராக தங்கமணி மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலாள ராக சரவணன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
    • இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.

    வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவ ராயனேந்தல் கிராம பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய அரசு புறம்போக்கு இடங்களை சுற்றி அடை யாள கற்களை நட்டு வைத்தனர். ேமலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை விரைவில் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பினர் போட்டிருந்த முள்வேலி களும் எரிக்கப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரையொருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கடுமையாக மோதிக் கொண்டனர்.

    இந்த மோதலில் பிரபா கரன் (வயது 56), இஸ்ரவேல் (45), பாக்கியராஜ் (44), சந்தன மாதா (40), சாம் தேவ குமார் (24), ஜான் செல்லையா (33) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர் பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலால் மணவராய னேந்தல் பகுதி யில் பெரும் பதட்டம் நீடித்து வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • இதில் ரூ.27 லட்சத்து 76 ஆயிரம் 54 கிராம் தங்கம் இருந்தது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவில் சக்தி ஸ்தலங்க ளில் பிரசித்தி பெற்ற கோவி லாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப் பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

    அதன்படி இம்மாதமும் நேற்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் கோசாலை உண்டி யல் 1, அன்னதான உண்டியல் 1 என மொத்தம் 13 உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டன.

    திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர் மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமை யில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட் டன.

    ரூ.27 லட்சம் காணிக்கை

    கோவில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண் ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக நிரந்தர உண்டியல் மூலம் ரூ.25 லட்சத்து 81 ஆயிரத்து 969-ம் கோசோலை உண்டியல் மூலம் ரூ.41 ஆயிரத்து 810-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 614 என மொத்தம் ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்து 393 ரொக்கமும், 54 கிராம் தங்கமும், 255 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.

    மேலும் காணிக்கை எண்ணும் பணியில் ராஜபா ளையம் சரக ஆய்வாளர், மகளிர் சுய உதவிக் குழுவினர், பக்தர் சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பெண், வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வீரார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னிதாய்(45). இவர் வீட்டுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோட்டூர் மலைப்பட்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் பின்புறம் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(33). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்கு றைவு ஏற்பட் டது. மருத்து வம் பார்த்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி தங்கபாண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் உள்ள இஸ்மாயில்கான் கோரி வகையறாவுக்கு பாத்தியத்திற்கு உட்பட்ட டாக்டர் ஜி.ஜி.கே. கோரி நினைவு இலவச மருத்துவ நல மையத்தில் அகில இந்திய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் 2 நாட்கள் நடந்தது.

    இந்த முகாமிற்கு காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாவட்ட பொது செயலாளரும், கோரி மருத்துவ நல மையத்தின் மக்கள் தொடர்பாளருமான சையது இஸ்மாயில் சித்திக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    காங்கிரஸ் நகர தலைவர் சங்கர் கணேஷ், அகில இந்திய சட்டா உரிமை கழகம் இமாம்ஷா, எச்.பி. கேஸ் அழகுராஜா, அப்துல் பஷீர் ரகுமான், நகர் மன்ற உறுப்பினர் ரபிக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் கலந்து கொண்டார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு மூட்டு மற்றும் கழுத்து, இடுப்பு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சையது இஸ்மாயில் சித்திக் செய்திருந்தார்.

    • செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சிறுநீரக நோயால் பலர் சிகிச்சை பெறுவதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 44 ஊராட்சிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நரிக்குடி, என்.முக்குளம், புல்வாய்க் காரை, மானூர், வீரசோழன், கொட்டகாட்சியேந்தல், மறையூர் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக் கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பெரும் வகையில் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் கொட்டகாட்சி யேந்தல் மற்றும் மறையூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி இருந்தும் தற்போது வரை அதனை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளம், சாலை இலுப்பைகுளம் ஊராட் சிக்கு உட்பட்ட சொட்டமுறி என இன்னும் இது போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குழாயில் வரும் குடிநீரை குடிப்பதற்கு பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடிக்க குடிநீரின்றி வேறு வழியில்லாமல் பல வருடமாக அதனை குடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகளால் கடும் பாதிப்படைந்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் திட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் மின் இணைப்பே கொடுக் கப்படாமல் உள்ளது.

    எனவே பெரும்பாலான குடிநீர் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு செயல்பாடின்றி கிடப்பதால் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள குடிநீர் நிலையங்க ளின் உபகரணங்கள் வீணாகி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் சுகாதாரமான குடிநீருக்காக பல வருடங்களாக ஏங்கி தவித்து வருவதாக அப்பகுதி களிலுள்ள சமூக ஆர்வலர் கள் கடும் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் பல கிராமங்களில் குழாய்களில் வரும் குடிநீரை குடித்து வருவதால் பொது மக்களுக்கு கல்லடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மருத்து வமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருவதா கவும் தெரிய வருகிறது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ஆகவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்லடைப்பு மற்றும் சிறுநீ ரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் கிராமங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உடனடியாக அங்கு 5 ரூபாய் நாணய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தருவதோடு, அதன் செயல் பாடுகளை அதிகாரிகள் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×