இயற்கை உணவு சமையல் போட்டி

இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.
இயற்கை உணவு சமையல் போட்டி
Published on

சிவகாசி

சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை அமைப்பின் சார்பில் இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.

கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 56 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் விக்னேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் மேகலா, முத்தமிழ் மாலா ஆகியோர் 2-ம் பரிசும், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் பிரியதர்ஷினி, சந்தியா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com