வாலிபர்-நர்சு மாயம்

அருப்புக்கோட்டை அருகே வாலிபர்-நர்சு மாயமானார்கள். ஆவியூர், வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்-நர்சு மாயம்
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

சம்பவத்தன்று மனைவி வேலைக்கு செல்லுமாறு பிரபாகரனிடம் கூறி யுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதைத்தொடர்ந்து அவரது தந்தை சந்திரன் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரசோழன் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகள் மீனாள்(20). நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மீனா ஊருக்கு வந்தார். பெற்றோர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மகள் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார்? என கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதைத்தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு வீரசோழன் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com