என் மலர்
விருதுநகர்
- திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்தார்.
- தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புது பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று ஒரு வாலிபர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் விஷம் குடித்த யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் விருதுநகர் சுலோச்சனா தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கணேசன் (வயது25) என தெரியவந்தது. இவருக்கு கடந்த ஜூன் மாதம் விசாலாட்சி என்பவருடன் திருமணமானது.
கணேசன் ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 4 வருடங்க ளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய அவருக்கு முதுகு தண்டுவட சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கணேசன் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்தநிலையில் பாளையங்கோட்டையில் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி விசாலாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- 2 குழந்தைகளின் தாய் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி பூமாதேவி. இவர்களுக்கு இன்பராஜ் (4), யோகேஸ் பாண்டி (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பூமாதேவி வீட்டு வேலையை சரிவர செய்யாமல் எப்போ தும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை காளீஸ்வரன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காளீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை.
அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு சென்றவர் என தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து மனைவி-குழந்தை களை கண்டுபிடி த்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் காளீஸ்வ ரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்கள்
விருதுநகர் சாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் பவித்ரா (23). முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பொதுத் தேர்வு பயிற்சிக்கு செல்லும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் பயிற்சிக்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை என பவித்ரா கூறியுள்ளார்.
ஆனாலும் பெற்றோர் பயிற்சிக்கு செல்லும்படி தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள முப்பத்திபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பொன்க விதா (22). வீட்டிலிருந்த பொன்கவிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த பிரதீப் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா. கடன் பிரச்சினை காரணமாக மனைவியின் 6 பவுன் நகைகளை அடகு வைத்தார். தவணை கட்ட முடியாததால் ஆட்டோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போட்டி தேர்வுகளில் பங்கேற்பது மாணவர்கள் தங்களின் திறனை அறிந்து கொள்ள உதவும் என்று விருதுநகர் கலெக்டர் கூறினார்.
- மாவட்ட கல்வி அலுவலர் வீரபாண்டிய ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவு தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கையேட்டினை அவர் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில் 11 -ம் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு மிக சிறப்பான திட்டமாகும். இந்த தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.1000 வீதம் இளங்கலை பட்ட படிப்பு வரை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர் களில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள 15 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 16 அரசு மேல்நிலை பள்ளி களைச் சேர்ந்த 150 மாணவர்கள் என மொத்தம் 300 மாணவர்களுக்கு கடந்த 2 மாதமாக சனி, ஞாயிறு நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது.
தற்போது இத்தேர்விற்கு, 29.09.2023 முதல் 01.10.2023 வரை 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போட்டி தேர்வில் பங்கு பெறுவது என்பது இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் திறனை அறிந்து கொள்ளவும், அனைத்து போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கு பெற்று வெற்றி பெறவும் முடியும். வெற்றி பெறுவதில் மூலம் கிடைக்கும் உதவி தொகை நிதிசுமையை குறைக்கும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் வீரபாண்டிய ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 500 கர்ப்பிணிகளுக்கு 19 வகையான சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசி னார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், ராஜபாளையம் மருத்துவ அலுவலர்கள் வரலட்சுமி, ரம்யா, உமாமகேஸ்வரி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் சுமதி ராமமூர்த்தி, கல்பனா குழந்தை வேலு, சேகர், நவமணி, சொர்ணம், துணை சேர்மன் துரைகற்பக ராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
- உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி யில் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந் தது. கலெக்டர் ஜெயசீ லன் தலைமை தாங்கினார். விழா வில், 200 கர்ப்பிணி தாய் மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத் தப்படுகிறது. நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப் பிணி பெண்கள், கர்ப்பகா லத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந் தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தை யாக இருக்கும் என்பதற்காக ஏற் படுத்தப்பட்ட அறிவியல் பூர் வமான நிகழ்ச்சியாகும்.
ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டி னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.
அந்த சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு கல்வி, சுகா தாரம் ஆகிய இரண்டும் முக் கியமான காரணிகளாக இருக்கிறது. அந்த அடிப்ப டையில் தான் மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு இரண்டு ஆண்டு காலத்திலே நாட்டினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூ டிய இந்த இரண்டு பெரும் காரணிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை தந்திருக்கி றார்கள்.
திருச்சுழி தொகுதி மக்க ளின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப் பதற்கான பல ஆண்டு கோரிக்கையினை நிறை வேற்றி தந்துள்ளது தமிழக அரசு.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) ஹேமலதா, அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் (பொ) வித்யா, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் காளீஸ்வரி சமயவேலு, திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்த லைவர் பொன்னுதம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் போஸ், கமலிபாரதி, நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கண்டுகொண்டான் மாணிக் கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், திருச்சுழி தி.மு.க. செயலாளர் சந்தன பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்தார்.
- அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.
விருதுநகர்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் விஞ்ஞானி,பசுமை புரட்சியாளர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இந்தியா இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வேளாண் அறிஞர் தமிழ்த்தாயின் தலைமகன்களில் ஒருவரான டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களே.
அவருடைய மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை அமைப்பின் சார்பில் இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.
கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 56 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் விக்னேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் மேகலா, முத்தமிழ் மாலா ஆகியோர் 2-ம் பரிசும், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் பிரியதர்ஷினி, சந்தியா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.
- காளீஸ்வரி கல்லூரியில் கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு நடந்தது.
- ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின், இளங்கலை வணிகவியல் துறை சார்பில் மைக்ரோசாப்ட் எக்செல் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை தாங்கினார்.
துறைத் தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை வணிகவியல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் யோகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு எக்செல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். மாணவி ஐஸ்வர்ய லட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார். முடிவில் மாணவன் ஜெய் பிரகாஷ் குமார் நன்றி கூறினார். மாணவிகள் மு.ஜெயராசாத்தி மற்றும் வை.ஜமுனாதேவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.
- சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விருதுநகர்:
மருதமலை படத்தில் நடிகர் வடிவேலு தோன்றும் காமெடி காட்சியில் ஒரு பெண் அவருக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி என்று 5 பேரை மணந்துகொண்டு, 6-வது நபருடன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு வரும் காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிஜ வாழ்க்கையில் அப்படியொரு பெண் முயன்று மாயமாகி உள்ளார்.
சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பிளஸ்-2 வரை படித்துவிட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் சாமிபுரம் காலனியை சேர்ந்த அருண் (23) என்பவரை காதலித்தார். பெற்றோருக்கு தெரியாமல் கடந்த மாதம் 21-ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் ஒரே வாரத்தில் அருணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஒரு வாரம் கடந்த பின்பு சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த தமிழ் வளவன் (21) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
சில நாட்கள் கடந்த நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தாய் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே அவரை, முதல் கணவரான அருண் கடத்தி சென்றிருக்கலாம் என இளம்பெண்ணின் சகோதரர் பால்பாண்டியும் (22), 2-வது கணவரான தமிழ்வளவனும் நினைத்தனர்.
அவர்கள் தங்களது நண்பர்கள் முருகேசன் (21), கார்த்தீஸ்வரன் (26) ஆகியோருடன் அருண் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் அருணை சரமாரியாக தாக்கினர். தப்பி ஓட நினைத்த அவரை அரிவாளால் வெட்டியதில் கை மணிக்கட்டு துண்டானது.
மேலும் தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்தார். அருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதை பார்த்த பால்பாண்டி உள்பட 4 பேரும் அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் துடித்த அருணை அங்கு வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பால்பாண்டி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான அந்த பெண்ணையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி தேவசுமதி. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் தேவசுமதிக்கு முடித்தலை பகுதியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதாலாக மாறியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தேவசுமதி 4 வருடங்கள் இளையராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.
அவரை தேடி கண்டு பிடித்த கணவர், குழந்தை கள் வளர்ந்துவிட்டதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்று தேவசுமதியும் மீண்டும் வீட்டுக்கு வந்தார். ஆனால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதனை கணவர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் தேவசுமதி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து செல்போனை கணவர் வாங்கினார். அப்போது போனில் பேசியது இளையராஜா என தெரியவந்தது.
தனது மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறி கூறி அவரை கணவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சின் அருகே ஜோசப் சென்று கொண்டிருந்த போது இளையராஜா அவரை வழிமறித்து அரிவா ளால் வெட்டியுள்ளார்.
அதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஜோசப் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு நடந்தது.
- முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
சிவகாசி
காளீஸ்வரி கல்லூரியின் தமிழ் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் சார்பில் மேலாண்மை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. துணை முதல்வர் முத்துலட்சுமி தலைைம வகித்தார்.
முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் துறை தலைவர் அமுதா அறிமுகப்படுத்தி பேசினார். முதுகலை மாணவி சினேகா வரவேற்றார்.
முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார். பேராசிரியை மரியசெல்வி நிகழ்ச்சிைய ஒருங்கிணைத்தார்.
- வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது.
- இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியாபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மலையம்மாள் (வயது55). இவரது கணவர் முத்துச்சாமி, ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மகன் மானாமதுரையிலும், மகள் ராஜபாளையத்திலும் வசித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மலையம்மாள் மகனை பார்ப்பதற்காக மானாமதுரை சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மலையம்மாள் ஊருக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், மோதிரம் உள்பட 8 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் மலையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






