என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் குற்றச்சாட்டு"

    • மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளதாக கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலந்துரை யாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயமும், தொழிலும் இல்லாமல் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் தைரி யமாக அறிமுகப்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உறுதியான பாரதம் உருவாக விஸ்வ கர்மா கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதனை பிரதமர் செயல்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தின் முழு நோக்கம் கைவினை கலைஞர்களின் வாழ்வா தார மேம்பாடு தான்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஆனால் மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்கு வதற்கான விழிப்புணர்வு இல்லை. பொதுமக்களின் குறைகளை மத்திய-மாநில அரசுகளிடம் எடுத்துச் சொல்ல முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விஸ்வகர்மா நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×