என் மலர்
விருதுநகர்
- கட்சிக்கொடி வைப்பதில் பிரச்சினை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராம லிங்கம் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம், கட்டிட தொழி லாளி. இவர் 4 வருடங்க ளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் அவருக்கு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நூலக கட்டிட திறப்பு விழா நடந்தது. அப்போது வீட்டு முன்பு வைத்த கட்சிக்கொடியை அகற்றுமாறு அன்புசெல்வம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜா, டேனியல், மொட்டையசாமி ஆகியோர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே விவகாரத்தில் ராஜாபாண்டி என்பவர் கொடுத்த புகாரில் கட்சி விழா நடைபெற்ற போது அன்புசெல்வம் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து விலகி நிற்குமாறு கூறி அங்கிருந்த பெண்கள் மற்றும் கட்சியினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாமலை டெல்லி சென்று திரும்பும்போது தலைவராக வருவாரா?
- மாணிக்கம் தாகூர் எம்.பி. கூட்டத்தில் பேசினார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழி லா ளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டி, பட்டாசு தொழில் நூற்றாண்டு விழா சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், யூனி யன் துணைத் தலைவர் விவேகன் ராஜ், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்த ரராஜன், பட்டாசு தொழிற் சங்கத்தை சேர்ந்த தேவா, பாலசுப்பிரமணியம், முரு கன், மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பல தடைகளை தாண்டி சிவகாசி தீப்பெட்டி, பட் டாசு தொழில் நூற்றாண்டை கடந்துள்ளது. மோடி அர சால் பட்டாசு தொழிலுக்கு பல சோதனைகள் வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் வளர்ச்சி அடையும். ஏற்று மதிக்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்ப டும். உலக அளவில் பட்டாசு தொழிலை கொண்டு செல்ல இந்திய கூட்டணி தலைவர்கள் விரும்புகி றார்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய் யும் மாநிலங்களில் வருகின்ற தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்ப னைக்கு தடை விதிக்காமல் இருக்க தேவையான முன்னேற் பாடுகள் செய்யப் படும். பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. முதலில் அப்பகுதியில் வைக்கோல் எரிப்பதை டெல்லி அரசு தடை செய்ய வேண்டும். டெல்லி சுற்றுச் சூழல் மாசுக்கு பட்டாசு காரணம் இல்லை என்பதை அந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக காங்கி ரஸ் ஒத்துழைப்பு தரும். அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அவர் திரும்பும் போது தலைவரா கவே வருவாரா? அல்லது புது தலைவர் வருவரா? பொறுத்திருந்து பார்ப் போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலை வர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.
- டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர்.
ராஜபாளையம்:
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வாக்குரைத்த வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் மனிதநேயம் என்றால் என்ன என கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. எந்திரத்தனமான உலகில் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதே சாலச்சிறந்தது என்று தங்களுக்குள் ஒரு கொள்கை வகுத்து விலகி செல்வதால் ஏற்படும் இழப்பு குறித்து இந்த சமுதாயம் சிந்திக்காமல் செல்வது தான் வேதனைக்குரியது.
அப்படியொரு மனிதநேய மற்ற செயலால் காந்தி ஜெயந்தியான இன்று ஒரு உயிர் சாலையோரம் பறிபோகியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ்கர் (வயது 50). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மற்றும் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பஸ்சில் வேலைக்கு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.
வழக்கம்போல் இன்று காலை மனைவியிடம் கூறி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சென்று தனியார் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அந்த பஸ்சில் டிரைவராக மகேஷ் என்பவரும், கண்டக்டராக கோபால் என்பவரும் பணியில் இருந்தனர்.
பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.
பேருந்து ராஜபாளையம் நகருக்குள் நுழைந்தபோது திடீரென்று ஜோதிபாஸ்கருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதைப்பார்த்த பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயம் தனியார் பஸ் காந்தி சிலை ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை கடந்துதான் சென்றது.
இருந்தபோதிலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் டிரைவர், கண்டக்டர் இருவரும் வலியால் துடித்தவரை வேடிக்கை பார்த்தவாறு சென்றுள்ளனர். பின்னர் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை உருவானது.
இதையடுத்து சங்கரக்கோவில் முக்கு பகுதிக்கு பேருந்து வந்ததும் டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து நெஞ்சுவலியால் உயிருக்கு போராடிய ஜோதி பாஸ்கரை பஸ்சில் இருந்து கைத்தாங்கலாக தூக்கி வந்து சாலையோரம் உள்ள டீக்கடை முன்பு அமர வைத்து விட்டு அடுத்த கலெக்சனை எதிர்பார்த்து பேருந்தை எடுத்து சென்றனர்.
இதற்கிடையே டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஜோதிபாஸ்கர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ வசதி இல்லாத காலத்தில்கூட உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட காலம் போய், மருத்துவமனையை கடந்தபோது கூட நெஞ்சுவலியால் துடித்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு பேருந்தை இயக்கி, அதிலும் அந்த நபரை பாதி வழியில் இறக்கி சாலையோரம் கிடத்திவிட்டு சென்று தனியார் பஸ் ஊழியர்களின் செயலால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோய் உள்ளது.
வேலைக்கு சென்ற கணவர், சில மணி நேரங்களிலேயே பிணமாக வீடு திரும்பியதை பார்த்து அவரது மனைவி, பிள்ளைகள் கதறித்துடித்தது காண்போர் நெஞ்சை கசக்கி பிழிந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
- வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் இந்தி ராநகர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் மகன் வைர முத்து (வயது 25). ராஜபா ளையத்தை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
ஆண்டிராய்டு போனில் அதிக நேரத்தை செலவிட்ட வைரமுத்து முகநூல் கணக்கும் வைத்திருந்தார். அதில் ஏராளமான நண்பர்களையும் கொண்டிருந்தார். இதற்கிடையே ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்துவுடன் நண்பராக தன்னை இணைத்துக்கொண்டார்.
நட்பை கடந்த உறவு அவர்களிடையே நீடித்தது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் தங்களது காதலை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர். எப்படியும் தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
இதற்கிடையே வைரமுத்துவின் பெற்றோர், தங்களது மகன் திருமண வயத்தை எட்டிவிட்டதால் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். இதுபற்றி மகனிடமும் தெரிவித்த அவர்கள் அழகான பெண்ணை தேடித்தேடி கடைசியில் ஒருவரை முடிவு செய்தனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
அப்போதுதான் வைரமுத்து தனது தந்தையிடம், தான் ஈரோட்டை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்த வைரமுத்துவின் தந்தை பாஸ்கரன், அது ஒருபோதும் நடக்காது. உனக்காக நாங்கள் ஒரு பெண்ணை பார்த்துவிட்டோம். நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது, அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இளம் பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர் காதலனிடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து மனவிரக்தியில் இருந்த வைரமுத்து பணியிலும் நாட்டமின்றி காணப்பட்டார். தனது காதல் ஈடேறாது என்று எண்ணிய வைரமுத்து தற்கொலை முடிவுக்கு வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் தனி அறையில் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென்று எழுந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எம்.ஐ.எஸ்.அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் எம்.ஐ.எஸ். அனாலிஸ்ட் ஒரு பணியிடத்திற்கு வெளிப்பணி மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு 30 வயதிற்குட்பட்ட மற்றும் 3 ஆண்டுகள் கணிணி இயக்கவியலில் முன் அனுபவமுள்ள, தகுதி வாய்ந்த பி.இ., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), பி.டெக்., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்) எம்.சி.ஏ., (கணிப்பொறி அறிவியல்), எம்.எஸ்.சி., (கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பினம்) பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் அஞ்சல்-626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆவின் ஐஸ்கிரீம் விநியோகம் செய்ய விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் ஆவின் அலுவலக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் பெற கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை-நெல்லை வந்தே பாரத் ெரயில்: சாத்தூர், திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.
- ெரயில் போக்குவரத்து என்பது மக்களின் வசதிக்காக தான்.
விருதுநகர்
மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ண விற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-
மத்திய ெரயில்வே துறை தென் மாவட்டங்களுக்கான ெரயில் போக்குவரத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ெரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. ஆனால் இந்த ெரயில் முக்கிய ெரயில் நிலையங்களான விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய ெரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்க் பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ெரயில் தென் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரான சாத்தூர் மற்றும் திருமங்க லத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூரில் பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வரும் நிலையிலும் விருதுநகர்- மதுரை இடையே முக்கிய தொழில்நகராக திருமங்கலம் உள்ள நிலையிலும் இந்த 2 ெரயில் நிலையங்களிலும் வந்தே பாரத் ெரயில் நின்று செல்ல வேண்டியது அவசியமாகும்.
ெரயில் போக்குவரத்து என்பது மக்களின் வசதிக்காக தான். எனவே மக்களின் வசதி கருதி ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே தாங்கள் இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருமங்கலம் மற்றும் சாத்தூர் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கள்ளக்காரி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வள்ளி (45). கடந்த 10 வருடங்களாக மனைவியை மாரிமுத்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது மனைவியின் தலையில் மாரிமுத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.
அதைப் பார்த்து அங்கிருந்த அவர்களின் மகள் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனே மாரிமுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த வள்ளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளதாக கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
- இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலந்துரை யாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாயமும், தொழிலும் இல்லாமல் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் தைரி யமாக அறிமுகப்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உறுதியான பாரதம் உருவாக விஸ்வ கர்மா கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதனை பிரதமர் செயல்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தின் முழு நோக்கம் கைவினை கலைஞர்களின் வாழ்வா தார மேம்பாடு தான்.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஆனால் மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்கு வதற்கான விழிப்புணர்வு இல்லை. பொதுமக்களின் குறைகளை மத்திய-மாநில அரசுகளிடம் எடுத்துச் சொல்ல முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விஸ்வகர்மா நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ரெயில்வே பீடர் ரோட்டை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் தனலட்சுமி துளசிராம், கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக் கப்பட்டதிலிருந்தே கூட்டத்தின் போது ஒலிபெருக்கி வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை செய்து தரப்படாததால் கவுன்சிலர்கள் கலையரசன், முத்துராமன் உள்ளிட்டோர் கூம்பு வடிவ குழாய் மூலம் பேசினர்.
இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்திற்குள் ஒலிபெருக்கி வசதி செய்து தரப்படுமென தலைவர் மாதவன் மற்றும் கமிஷனர் லீனா சைமன் ஆகியோர் உறுதி கூறினர்.
எங்கு சென்றாலும் மக்கள் ெரயில்வே பீடர் சாலையை எப்போது சீரமைக்க போகிறீர்கள் என கேட்கும் நிலை உள்ளதால் அதனை உடனடியாக ஆக்கிரமிப்புக ளை அகற்றி சீரமைக்க வேண்டுமென கவுன்சி லர்கள் முத்துராமன், முத்துலட்சுமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மாதவன் உறுதி அளித்தார்.
கவுன்சிலர் முத்துராமன் தனது வார்டில் வேலுச்சாமி நகரில் மின் மோட்டார் இயக்கப்படாததால் குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும், கவுன்சிலர் முத்துலட்சுமி தனது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் நோய் பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முறையாக நடைபெற வில்லை என புகார் கூறப் பட்டது.
கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
பள்ளிகளில் நோய் பாதிப்பை தடுக்க பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டுமென கவுன்சிலர் ஜெயக்குமார் வலியுறுத்தி னார். புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் திறக்க வேண்டும் என காங்கிரஸ்
- 2-வது திருமணம் செய்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சூலப்பட்டி நாச்சி யார்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமி யாபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது. திரு மணத்தின்போது மாப் பிள்ளை வீட்டாருக்கு 10 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மேலும் பணம் கொடுக்குமாறு கவுசல்யாவை கண்ணன் வீட்டார் வற்புறுத்தி யுள்ளனர். அதன் பேரில் கவுசல்யா வீட்டினர் ரூ.50 ஆயிரம் கொடுத்து ள்ளனர். அதன்பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு வந்துள்ளனர்.
பணம் கொடுக்கா விட்டால் சேர்ந்து வாழ முடியாது என கண்ணன் வீட்டார் கூறியுள்ளனர்.
இதையடுத்து கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த கவுசல்யா, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொல்வீரன் பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை கண்ணன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து கவுசல்யா வுக்கு தெரியவந்தது. இதைதொ டர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கண்ணன் குடும்பத்தின் மீது கவுசல்யா வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் கண்ணன், அவரது தாயார் சுப்புதாய், சகோதரர் பன்னீர் செல்வம், சகோதரி சுந்தரம்மாள், சகோதரர் மனைவி பானுமதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கங்கை கரையில் குப்பை கிடங்கை அகற்ற ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர் போராடுகிறார்.
- அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.
ராஜபாளையம்
கடந்த 2015ஆம் ஆண்டு புனிதமான கங்கை நதி கரையில் மிகப்பெரிய அளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந் திருக்கிறது. இவை கங்கை நதியில் கலக்கக்கூடாது என்பதை தடுக்க கோரி ராஜ பாளை யம் வழக்கறிஞர் ராம்சங்கர் தேசிய பசுமை தீர்ப்பா யத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் மேற்படி குப்பை கிடங்கை அகற்ற கோரி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் ராம்சங்கர் கூறியதாவது:-
5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவை செயல்படுத்தாத உத்தர காண்ட் அரசின் தலைமை செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்றி அதன் அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என 2018-ல் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இன்று வரை கங்கை நதிக்கரையில் கொட்டப்பட்டும் மேற்படி மலை போல் குவிந்துள்ள குப்பை கிடங்கு அகற்றப் படாமல் உள்ளது. அதை எதிர்த்து தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு 27 செப்டம்பர் 2023ல் விசார ணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 6 வாரத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். ஆறு வாரக் காலத்திற்குள் அரசு அதிகாரிகள் நீதிமன்ற த்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
அரசு அதிகாரி களின் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் இருப்பது போன்றவை அரசுக்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தும். இதுபோன்ற உத்தரவுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






