என் மலர்
விருதுநகர்
- மருதநத்தம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள மருதநத்தம் கிராமத்தில் ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நாட்டார்மங்கலம் அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் காசிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகவல்லி, சீனிவாசன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ., கிராம பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
- வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தது. அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் 3 தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும் அவர்கள் படுகாயம் அடைந்து இருந்தனர். விசாரணையில் கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் வெடிவிபத்தில் படுகாயமடைந்து இருந்தது தெரியவந்தது. இவர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது.
- முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜொலிப்பதை போல, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்ளவும், மற்றவர்களை மிஞ்சி வெற்றிபெறவும் தனித்துவமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பைப் பெறுவதை விட வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாணவி ஆகாஷ் செல்வி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.மாணவர் பாலசங்கர் வரவேற்றார். மாணவி ஆகாஷ் செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.
- நிலதரகர்கள் நல சங்கம் சார்பில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
மகாத்மா காந்தி 155-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் ராஜபாளையம் தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமையில் நகர செயலாளர் ராசு, பொருளாளர் ஆறுமுகம் முன்னிலையில் மாநில தலைவர் டாக்டர் கண்ணன், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாநில துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலில் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது52). அங்குள்ள ஒரு சமுகாத்தினருக்கு சொந்தமான கோவிலில் நிர்வாகியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பையா. கோவிலில் புனரமைப்பு பணிகளை ரூ.79 லட்சத்து 40 ஆயிரத்து 375 மதிப் பீட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து அந்த தொகை கோவில் நிர்வா கத்தின் சார்பில் சுப்பையா விடம் கொடுக்கப்பட்டது.
முழுவதுமாக பணிகள் முடிவடையாத நிலையில் நிர்வாகத்திடம் கூடுதலாக சுப்பையா பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு வரவு-செலவு கணக்கு களை ஒப்படைக்குமாறு நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அப்போதும் செலவு கணக்கு கொடுக்க சுப்பையா மறுத்துவிட்டார். இதையடுத்து கோவில் பணிகளில் சுப்பையா ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.
கோர்ட்டு உத்தர வின்பேரில் ஒப்பந்ததாரர் சுப்பையா, மற்றொரு சுப்பையா, ராமராஜ், ஜெயக்குமார், சரவணன், சிற்பி சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.
இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த
200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
- குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
- அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
விருதுநகர்
காந்தி ஜெயந்தியை யொட்டி விருதுநகர் யூனியன் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வரதராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறியதுடன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்றும் புகார் கூறினர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.
மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தார். கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்வதாக தெரி வித்தார். முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வைரவ சாமி, வக்கீல் சரவணன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன்
எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறை யாக மாற்றியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, துணை சேர்மன் துரை கற்பகராஜ், கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல்கனி, கிளை செயலாளர்கள் சின்னதம்பி, சீதாராமன், வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
- சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்
கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.
- ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார்.
- மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் வெவ்வேறு கிராமங்களில் நடத்த வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.
அப்போது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார். இதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
காந்தி ஜெயந்தியன்று பொதுமக்களின் குறைகளுக்காக போடப்பட்ட கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மான்ராஜ் எம்.எல்.ஏ. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அம்மையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விவசாயியை எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமறைவாகி உள்ளார்.
இரவு முழுவதும் தேடியும் தங்கப்பாண்டியன் கிடைக்காத நிலையில் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் அல்லது கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
- மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி செல்வி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது27). இவர் தனது நண்பர் பாலமுருகனோடு சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாலமுருகன் பின்னால் அமர்ந்து சென்றார்.
எதிர் திசையில் முதலிபட்டியை சேர்ந்த குருசாமி தனது தம்பி வருண்குமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பாலமுருகன் மற்றும் வருண்குமார் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வருண்குமார் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி மஞ்சு (வயது20). இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணமானது.
கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு மஞ்சு செல்வார். சம்பவத்தன்று மஞ்சு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து மஞ்சு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். மா மனார் சுந்தரலிங்கத்திடம் தட்டி கேட்டார். அப்போது சுந்தரலிங்கம் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமனார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே விவகாரத்தில் கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்து, முருகன், முத்து முனி யாண்டி ஆகியோர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுந்தரலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






