சிறுமிக்கு பாலியல் தொல்லை-வாலிபருக்கு வலைவீச்சு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை-வாலிபருக்கு வலைவீச்சு
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பெருமாள்சேரியை சேர்ந்த ஊர்த்தடியான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் விடுமுறைக்கு சிறுமி ஊருக்கு வந்தார். திருவண்ணாமலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அங்கு வந்த ஊர்த்தடியான் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஊர்த்தடியானைதேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com