கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடந்தது. போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலர் திருப்பதி (44). இவர் மணல் திருட்டு தொடர்பாக உளுத்திமடை ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனைக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் திருப்பதியுடன் தகராறு செய்து தாக்கினார். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்-அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் செங்குன்றாபுரம் கிராம உதவியாளராக உள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இவருக்கு தங்கை கணவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.

மேலும் தங்க செயினை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com