காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு

காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.
காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜொலிப்பதை போல, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்ளவும், மற்றவர்களை மிஞ்சி வெற்றிபெறவும் தனித்துவமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பைப் பெறுவதை விட வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாணவி ஆகாஷ் செல்வி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.மாணவர் பாலசங்கர் வரவேற்றார். மாணவி ஆகாஷ் செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com