search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children lost"

    • 2 குழந்தைகளின் தாய் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி பூமாதேவி. இவர்களுக்கு இன்பராஜ் (4), யோகேஸ் பாண்டி (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பூமாதேவி வீட்டு வேலையை சரிவர செய்யாமல் எப்போ தும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை காளீஸ்வரன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காளீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை.

    அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு சென்றவர் என தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து மனைவி-குழந்தை களை கண்டுபிடி த்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் காளீஸ்வ ரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்கள்

    விருதுநகர் சாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் பவித்ரா (23). முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். பொதுத் தேர்வு பயிற்சிக்கு செல்லும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் பயிற்சிக்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை என பவித்ரா கூறியுள்ளார்.

    ஆனாலும் பெற்றோர் பயிற்சிக்கு செல்லும்படி தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள முப்பத்திபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பொன்க விதா (22). வீட்டிலிருந்த பொன்கவிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த பிரதீப் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா. கடன் பிரச்சினை காரணமாக மனைவியின் 6 பவுன் நகைகளை அடகு வைத்தார். தவணை கட்ட முடியாததால் ஆட்டோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×