என் மலர்
நீங்கள் தேடியது "Natural food"
- குடும்ப நல நீதிபதியும், நீதிமன்ற பாலின உணா்திறன் குழு தலைவருமான வி.பி.சுகந்தி வரவேற்புறையாற்றினாா்.
- இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இயற்கை உணவே சிறந்தது என்றாா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் நீதிமன்ற பணியாளா்களுக்கான பாலின உணா்திறன் மற்றும் ஆரோக்கியமான உணவு முறை தொடா்பான கருத்தரங்கு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிபதியும், நீதிமன்ற பாலின உணா்திறன் குழு தலைவருமான வி.பி.சுகந்தி வரவேற்புறையாற்றினாா்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயற்கை மருத்துவா் யுவபாரத் பேசியதாவது:-
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவே நமக்கு சிறந்த மருந்தாகும். அதிலும், தாவரங்களில் இருந்து மட்டுமே நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன. அசைவ உணவுகளை உட்கொள்வதாலும், அதிக அளவில் உணவை வேகவைத்து சாப்பிடுவதாலும் அதிக நோய்கள் வருகின்றன. ஆகவே இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இயற்கை உணவே சிறந்தது என்றாா். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் சாா்பு நீதிபதியும், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலருமான மேகலா மைதிலி, நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை அமைப்பின் சார்பில் இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.
கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 56 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் விக்னேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் மேகலா, முத்தமிழ் மாலா ஆகியோர் 2-ம் பரிசும், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் பிரியதர்ஷினி, சந்தியா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
எண்ணை சேர்க்காமல், காய்கறிகளை வேக வைக்காமல் 3.05 நிமிடத்தில் இந்த இயற்கையான உணவுகள் தயாரிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டு 300 வகையான உணவுகளை தயாரித்தனர்.
கின்னஸ் சாதனைக்காக ஜியோ இந்தியா பவுண்டேசன் மற்றும் விமானநிலைய கல்யாண் மயி ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி, நடிகை அஞ்சனா, சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ChennaiAirport






