பெண் போலீசை கிண்டல் செய்து மீம்ஸ்- வாலிபர் கைது

பெண் போலீசை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.
பெண் போலீசை கிண்டல் செய்து மீம்ஸ்- வாலிபர் கைது
Published on

விருதுநகர்

சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கற்பகலட்சுமி(34).இவர் ஓ.மேட்டுப்பட்டியில் நடந்த விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். அங்கு இவர் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது ஒரு வாலிபர் வீடியோ எடுத்து அவரை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில் இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் கற்பகலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த நல்லையாராஜ் என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com