அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்றார்.முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புதிய அறங்காவலர்களாக ராம்கோ சேர்மன் வெங்கட் ராமராஜா, ராம்குமார் வரதராஜன், உமாராணி, நளாயினி, மனோகரன் ஆகி யோரை தேர்வு செய்து தமிழக அரசின் அறநிலை யத்துறை அறிவித்தது. அதன் பிறகு அறங்காவ லர்கள் குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக்கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் இந்து அறநிலை யத்துறை இணை ஆணை யாளர் செல்லத் துரை, உதவி ஆணையாளர் வளர் மதி, நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன், இளைஞர் அணியை சேர்ந்த ஆர்.வி.கே. துரை, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காளிமுத்து, நகர் மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், துணை சேர்மன் செல்வமணி, மாவட்ட அரசு வக்கீல் திருமலையப்பன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், முனியாண்டி, மம்சாபுரம், உதயசூரியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய அறங்காவலர் குழுவினருக்கு முக்கிய பிரமுகர்கள் பொன் னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com