நியாய விலைக்கடை- அங்கன்வாடியில் கலெக்டர் ஆய்வு

வரலொட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை- அங்கன்வாடியில் கலெக்டர் ஜெயசீலன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு எழுத்து திறன்குறித்து கலெக்டர் ஜெயசீலன் திடீர் ஆய்வு நடத்தினார்.
பள்ளி மாணவர்களுக்கு எழுத்து திறன்குறித்து கலெக்டர் ஜெயசீலன் திடீர் ஆய்வு நடத்தினார்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், வரலொட்டி கிரா மத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவை களின் தரம் குறித்து கேட்ட றிந்தார்.

பின்னர் அங்குள்ள கிராம அங்கன்வாடி மையத் தில் குழந்தைகள் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் அதன் தரம் குறித்து கேட் டறிந்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்ட மைப்புகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், குழந் தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com