search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    • நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இதன் மூலம் 741 நெசவாளர்கள் வரை பயன டைந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ராஜபாளை யத்தில் உள்ள தெற்கு வைத்தியநாதபுரம் தெரு சாலியர் சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, ராஜபாளையம் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மற்றும் மணிகண்டராஜா, சுகாதாரத்துறை சார்பில் ஜமீன் கொல்லங் கொண்டான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலுவ லர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி.இ. எக்ஸ்ரே, ரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 741 நெசவா ளர்கள் வரை பயன டைந்தனர்.

    மேலும் இம்முகாமில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடும் விழா, கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகிய வையும் நடைபெற்றது.

    Next Story
    ×