இமானுவேல்சேகரன் நினைவு நாள்

இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.
இளந்திரைகொண்டானில் இமானுவேல் சேகரன் சிலைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இளந்திரைகொண்டானில் இமானுவேல் சேகரன் சிலைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை உள்ளது. அவரது நினைவு தினத்தை யொட்டி இந்த சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்-அமைச்ச ருக்கு ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் நன்றிகள் தெரிவித்து கொள்வதாக அப்போது எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகர செய லாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் மலர் மன்னன், குமார், மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com