ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

விருதுநகர் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்

சிவகாசி தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாலா. இவரது மகன் அவினாஷ்(வயது 21). கேட்டரிங் படித்துள்ள இவர் சிவகாசியில் ராதா கிருஷ்ணன் என்பவரின் ஓட்டலில் பணியாற்றி வந்தார். பெரும்பாலும் இவர் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டல் மாடி அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று மாடியில் இருந்த அவினாஷ் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு வரவில்லை.

இதையடுத்து ராதாகி ருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவினாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவினாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com