என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க கோரி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்
- சாலையை சீரமைக்க கோரி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ் சாலை பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மீண்டும் மீண்டும் குழிகள் தோண்டப் பட்டு அந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.
இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் அளிக்கப் பட்டும் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட வில்லை. குழிகளை மட்டும் செப்ப னிடும் பணிகளை செய்வ தால் மீண்டும் சாலை சேதமடைந்து விடுகிறது.தற்போது இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் உரிய நிதி ஒதுக்கி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் தொடர்ச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.






