நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிக்கப்பட்டது. சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் கடம்பங்குளம் பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி(54). இன்று காலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி உள்ளனர். மேலும் நாகலட்சுமி சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com