என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
- ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
முகவூர் ஊராட்சி, காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி பேரூராட்சி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் கருணாநிதி படத்திற்கும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தி.மு.க நிர்வாகிகளுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய, நகர, துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனாகுழந்தைவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்.
- சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் போத்திராஜ் (வயது 42). இவர் திருநெல்வேலி செல்வதற்காக சாத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலை நடுவே சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் போத்திராஜூம், சாலையில் சென்ற நபரும் படுகாயம் அடைந்தனர். இதில் போத்திராஜ் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நபர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்பது தெரியவில்லை.
இதுபற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடந்தது.
- சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று “முக்கிய கணிதத் திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் "காளீஸ் கணித மன்றத்தின்" தொடக்க விழா நடந்தது. துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று "முக்கிய கணிதத் திறன்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், கணிதத்தின் முக்கியத்துவம் மற்றும் நிஜ வாழ்க்கை பிரச்சினைகளின் தீர்வு காண்பதில் கணிதத்தின் முக்கியத்துவம், பங்கு பற்றி விளக்கினார். கணிதத் திறன்களான பகுப்பாய்வு சிந்தனை, விமர்சன சிந்தனை, தருக்க சிந்தனை, நேர மேலாண்மை திறன் பற்றி எடுத்துக்கூறி, அந்தத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் முறைகளை பகிர்ந்து கொண்டார். கணிதவியல் துறைத்தலைவி லலிதாம்பிகை வரவேற்றார்.
துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார். இதில் 111 கணிதவியல் துறை மாணவர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் ஆராய்ச்சி மன்றம் (மினர்வா) சார்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கும் நிகழச்சி நடந்தது. ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை பரிதாபேகம், கவிஞர் டோரு தத்தின் கவிதையான "தி லோட்டஸ்"-ன் "மோதல் மேலாண்மை கோட்பாட்டின் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வழங்கினார்.
இந்த கட்டுரையில் சச்சரவு மேலாண்மை பற்றியும், அதை கவிஞர் டோருதத் தன் கவிதையில் எவ்வாறு கையாண்டுள்ளார்? என்பதையும் விளக்கினார். இதைத்தொடர்ந்து கேள்வி, பதில் நிகழ்வு நடந்தது.
முன்னதாக ஆங்கிலத்துறை தலைவி பெமினா வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார்.
- கார் மோதி விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
- சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். இவரது மனைவி சாந்தா பானு (வயது 45). இவர்களது மகள் ரிஸ்வானா (19).
நேற்று சாந்தாபானு தனது மகளுடன் மதுரைக்கு சென்றார். பின்னர் 2 பேரும் இரவு அரசு பஸ்சில் ஊர் திரும்பினர்.விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் தாய்- மகள் இறங்கினர்.
பின்னர் இருவரும் 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மதுரையில் இருந்து சிவகாசி சென்ற கார் எதிர்பாராத விதமாக சாந்தாபானு, ரிஸ்வானா ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மகள் கண் முன் சாந்தா பானு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய ரிஸ்வானாவை அப்பகுதி யினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியன் (57) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவிகள் உட்பட 3 பேர் மாயமானார்கள்.
- வெம்பக்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி (20). இவர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற சுபலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகள்
மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமா னார். இது குறித்து மல்லாங் கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள கீழகோதை நாச்சியார் புறத்தைச் சேர்ந்தவர் சோபியா. இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தேவாலயத்துக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45), விறகு வெட்டும் தொழிலாளி. கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் இவருக்கும் மனைவி லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மோகன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 75 பேரை நகர இன்ஸ்பெக்டர் கீதா கைது செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமலாக்க துறையை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
நகரத் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி மெடிக்கல் பெரியசாமி, தெற்கு வட்டாரத் தலைவர் பாலகுருநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநி பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன் கலந்துகொண்டார். இதில் வடக்கு வட்டார தலைவர் முருகராஜ், ராஜபாளையம் வட்டார தலைவர் கணேசன், வத்திராயிருப்பு மேற்கு வட்டார தலைவர் லட்சுமணன், கிழக்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன், மம்சாபுரம் நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு ஆறுமுகம், நகர் பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் முருகேசன், பூங்கனி வட்டார செயலாளர் இம்மானுவேல், மாவட்ட செயற்குழு காசிமாயன், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், ராஜபாளையம் நகர தலைவர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 75 பேரை நகர இன்ஸ்பெக்டர் கீதா கைது செய்தார்.
- இளையோர் கைப்பந்து போட்டி நடந்தது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் ராம்கோ ஊர்க்காவல் படை மைதானத்தில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி தொடங்கியது. மாநில கைப்பந்து கழக தலைமைப் புரவலர் ஜெயமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் தலைவர் அர்ஜுன்துரை காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் அணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணமராஜபாளையம்நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் துரைசிங், மாவட்டத் தலைவர் செல்வ கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், 3 மற்றும் 4 வது நாளில் நாக் அவுட் முறையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் சென்னை, கோவை பெண்கள் அணியினர் மோதினர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
- விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45), விறகு வெட்டும் தொழிலாளி. கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் இவருக்கும் மனைவி லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மோகன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி கடிதத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் (2021-22) கீழ் 68 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், எழை-எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு மற்றும் குடிசை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது தான் குடிசை மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர், அவர் வழியில் ''முதல்வரின் அனைவருக்கும் வீடுகள் திட்டம்'' மற்றும் பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.
அதனைத்தொடர்ந்து சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூலதன மானிய நிதித்திட்டம் (2021-22) மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் திறந்தவெளி கிணறு மற்றும் பிரதான குழாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையை எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.
இதில் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் வெங்கடபாபு, பேரூர் தி.மு.க. செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய துணை செயலாளர் குமார், இளைஞரணி சீனிவாசன், செல்வக்குமார், பட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் மாலைநேர உழவர் சந்தை நடத்தப்படுகிறது.
- மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும் நுகர்வோருக்கு தரமான, பசுமை காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் வழங்குவது ஆகும்.
2022-23-ம் ஆண்டு–க்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அழுகக்கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களான தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.
இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக சந்தைகளில் விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோர்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகள் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகமுள்ள ராஜபாளையம் உழவர்சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் தகுதியான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), விருதுநகர் அலுவலகம் (04562- 242601) அல்லது சந்தை நிர்வாக அலுவலர் , ராஜபாளையம் உழவர் சந்தை (8610067536) தொடர்பு கொள்ளலாம்.
பொது மக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இதில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து அம்மனை தரிசிப்பார்கள். மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு இன்று மாலை இருக்கன்குடி மேலமடை இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலை கொடி இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி,
கே. மேட்டுப்பட்டி, என். மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவில் நத்தத்துப்பட்டி கிராம மக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் பவனி வரச் செய்வார்கள். இதில் கலிங்ககல் மேட்டு ப்பட்டி,நெ.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி பொதுமக்கள் செண்டா, விருது, குடை, மேளம் சேவித்து அம்மனை அழைத்து வந்து சிறப்பு செய்வார்கள்.இதில் அப்பனேரி கிராம பொதுமக்கள் நகரா ஒலி எழுப்பி உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன்,பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.






