search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி: கணித மன்றம் தொடக்க விழா
    X

    “காளீஸ் கணித மன்றம்” தொடக்க விழாவில் பங்கேற்றவர்கள்.


    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி: கணித மன்றம் தொடக்க விழா

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று “முக்கிய கணிதத் திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் "காளீஸ் கணித மன்றத்தின்" தொடக்க விழா நடந்தது. துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று "முக்கிய கணிதத் திறன்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கணிதத்தின் முக்கியத்துவம் மற்றும் நிஜ வாழ்க்கை பிரச்சினைகளின் தீர்வு காண்பதில் கணிதத்தின் முக்கியத்துவம், பங்கு பற்றி விளக்கினார். கணிதத் திறன்களான பகுப்பாய்வு சிந்தனை, விமர்சன சிந்தனை, தருக்க சிந்தனை, நேர மேலாண்மை திறன் பற்றி எடுத்துக்கூறி, அந்தத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் முறைகளை பகிர்ந்து கொண்டார். கணிதவியல் துறைத்தலைவி லலிதாம்பிகை வரவேற்றார்.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார். இதில் 111 கணிதவியல் துறை மாணவர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் ஆராய்ச்சி மன்றம் (மினர்வா) சார்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கும் நிகழச்சி நடந்தது. ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை பரிதாபேகம், கவிஞர் டோரு தத்தின் கவிதையான "தி லோட்டஸ்"-ன் "மோதல் மேலாண்மை கோட்பாட்டின் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வழங்கினார்.

    இந்த கட்டுரையில் சச்சரவு மேலாண்மை பற்றியும், அதை கவிஞர் டோருதத் தன் கவிதையில் எவ்வாறு கையாண்டுள்ளார்? என்பதையும் விளக்கினார். இதைத்தொடர்ந்து கேள்வி, பதில் நிகழ்வு நடந்தது.

    முன்னதாக ஆங்கிலத்துறை தலைவி பெமினா வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார்.

    Next Story
    ×