என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கிருஷ்ணன் கோவில் குன்னூர் டாஸ்மாக் கடைக்கு எதிரில் பூவானியைச் சேர்ந்த தங்கபாண்டி, 144 மது பாட்டில்கள் அனுமதி இல்லாமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரமேஷ் தியேட்டர் அருகே ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் அரசு அனுமதி இல்லாமல் 40 மதுபாட்டில் வைத்து இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் லட்சுமணன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    • அட்டவணை பட்டியலில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் அருட்சகோதரிகள், இறைமக்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வட்ட அதிபர் சந்தனசகாயம் தலைமை தாங்கினார். உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அருட்சகோதரிகள், இறைமக்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றத்தின் தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான திறனறிப்போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    துறைத்தலைவர் பெமினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''ஆளுமை வளர்ச்சி மற்றும் மென்திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் பேசினார்.

    இலக்கிய மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடகம், நடனம், ஆங்கிலப் பாட்டுப்போட்டி, இலக்கிய அணிவகுப்பு, மவுன நாடகம் போன்ற போட்டிகள் நடந்தன.

    முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மரிய கிறிஸ்டினா வரவேற்றார்.

    இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் பிரதீப் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கப்பட்டது.
    • தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியில் உள்ள கிராமப்புற நூலக வளாகத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தில் இதற்கான நிகழ்ச்சி தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு தேசிய கொடியை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசினார்.

    முன்னதாக மாணவர்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடும் முறை மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் மாணவர்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவி யோகரசி, மாணவர் கவுதம்குமார் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார் குறித்து கலை நிகழ்ச்சி நடத்தினர். மடவார்வளாகம் தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.
    • உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் விக்னேஷ்காலனியை சேர்ந்தவர் ஆனந்த ராஜன். இவர் அதே பகுதியில் மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 22). இவர் ரஷ்யாவில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது பிறந்தநாள் வருவதையொட்டி அதனை கொண்டாட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறி்த்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்குவது வழக்கம்.

    நேற்று பிரதோஷம் ஆகும். இதனால் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர். ஆனால் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதாலும் வருகிற 12-ந் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனுமதி ரத்து என்பது தெரியாமல் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருப்பதால் அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனுமதி வழங்காததால் எண்ணற்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்தநிலையில் பக்தர்கள் இன்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    • மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
    • அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து உட்கோட்டபகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 46 மது பாட்டில்களும், ரூ.1580-ம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து 8 மது பாட்டில்களும், ரூ.1,360-ம், அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் இருந்து 26 பாட்டில்களும், ரூ.1660-ம், மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து 11 மது பாட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டிலும், கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளீஸ்வரி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது.
    • இந்த பேரணி ‘‘தூய்மை இந்தியா இயக்கத்தின்’’ ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ேநாக்கத்தில் நடத்தப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையில் விரிவாக்க பணி சார்பில் ''எனது குப்பை எனது பொறுப்பு, எனது நகரின் தூய்மை, எனது கடமை '' என்ற தலைப்பை மையமாக கொண்டு விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது.

    இந்த பேரணி ''தூய்மை இந்தியா இயக்கத்தின்'' ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ேநாக்கத்தில் நடத்தப்பட்டது. இதில் இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 170 மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அ.மீனாட்சிபுரம் வழியாக ஆனைக்கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பேரணி நடந்தது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளினால் வரும் பிரச்சினைகள், தூய்மை நகரம் பற்றிய விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக சென்று கிராம மக்களுக்கு வழங்க–ப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைஇளங்கலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணிக்கு மேலும் ஒரு சிறப்பு ெரயில் ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகிறது.
    • இந்த சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராஜபாளையம்

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயில்(06035/06036) பட்டுக்கோட்டை வழித்தடத்தில் வாராந்திர ெரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், காரைக்குடி வழித்தடத்தில் ஓடுகிறது.

    தற்போது ஒரு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் ராஜபாளையம் வழி யாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயிலாக(06039/06040) புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

    வருகிற 15-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (06039) ரெயில் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ராஜபாளையம் வழி திங்கட்கிழமைகளில் இயங்கும்.

    இதேபோல் வருகிற 16-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) ரெயில் கொல்லம், கோட்டயம் செங்கோட்டை ராஜபாளையம் புதன்கிழமை களில் இயக்கப்படும். தஞ்சை வழியாக புதிய வழித்தடத்திலும் இந்த சிறப்பு ரெயில் செல்லும்.

    எனவே அந்த மாவட்டத்திற்கு செல்பவர்க ளுக்கு இந்த ெரயில் சேவை மிகுந்த பயனளிக்கும். இந்த சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தினர்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையில் ராஜபாளையம்- தென்காசிரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா திருமணமண்டபத்தில் நடந்தது.

    முதன்மை சிறப்பு விருந்தினராக இதயம் வி.ஆர். முத்து கலந்து கொண்டு பேசினார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    ராஜபாளையம் தொழில் வர்த்தகசங்க தலைவரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர் நலனை மட்டுமல்லாது பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் தாமதமாக நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, புறவழிச்சாலை ஆகிய திட்டப்பணிகளை விரைவாக முடிக்க இந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    மற்ற மாநகராட்சி, நகராட்சி சொத்து வரியை விட ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிகமாக இருப்பதால் அடிப்படை சொத்து வரி விகிதத்தை குறைத்து அதற்கு பின் சொத்து வரியை நிர்ணயிக்கும் படி தொடர்ந்து கோரி வருகிறோம்.

    போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ெரயில்வே சுரங்க பாதை பணிகளையும் விரைந்து முடிக்க வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் ெரயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி இவற்றையும் விரைந்து முடிக்க கோரி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. புதிய நிர்வாகிகளை தொழிலதிபர் டைகர்சம்சுதின் முன்மொழிந்தார். கார்த்திக் வழிமொழிந்தார்.

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவராக பி. ஆர். வெங்கட்ராமராஜா, துணைத்தலைவர்களாக என் .கே. ஸ்ரீகண்டன்ராஜா, ஆர்.பத்மநாபன், செயலாளர்களாக எம் .சி. வெங்கடேஸ்வரராஜா, ஆர்.நாராயணசாமி, இணைச் செயலாளராக கே.மணிவண்ணன், பொருளாளர் பி.எம். ராமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலில் 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வருகிற 12-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம். இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் வரத்து இருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    எனவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட நாட்களில் மலை அடிவார பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கைத்தறி துணிகளை வாங்கி அனைவரும் நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது இதை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அ டிப்படையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதில், 40எஸ், 60எஸ், 80எஸ் ரக பருத்தி சேலைகள், செயற்கை இழை பட்டுச் சேலைகள், கைத்தறி லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், போர்வை ரகங்கள் ஆகியவை அரசு வழங்கும் 20 சதவீத தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் 10 பயனா–ளிகளுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைக–ளையும், முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ், 10 நெசவாளர்களுக்கு கடனுதவிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    ×