என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- அட்டவணை பட்டியலில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில் அருட்சகோதரிகள், இறைமக்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்ட அதிபர் சந்தனசகாயம் தலைமை தாங்கினார். உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அருட்சகோதரிகள், இறைமக்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.
Next Story






