என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவுன்சிலர்கள் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், தினசரி பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கே வந்து வாறுகால் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வர வில்லை, சாலை வசதி இல்லை என்ற அடிப்படை வசதிகள் குறித்து எங்களிடம் முறையிட்டு வருகின்றனர் என்றனர்.

    மேலும் இதை மாமன்ற கூட்டத்தில் பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பணிகளை செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து அனைவரின் குறைகளும் நிவர்த்தி செய்து அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

    மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்ப டம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வேல்முருகனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி நூர்சாகிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவரும், இவரது உறவிரனான 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வேல்முருகன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் நெருங்கி பழகினார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து வேல்முருகனும், அந்த சிறுமியின் மம்சாபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுகுறித்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வேல்முருகனை கைது செய்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுகிறது.
    • நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே முளைக்கொட்டு திருவிழா நடந்தது.
    • ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் ஏராளமான நெசவுத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஆடி மாதத்தில் முளைக்கொட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு சத்திரப்பட்டி புது தெரு, வடக்குத் தெரு, நடுத்தெரு, கீழ, மேல் பகுதி போன்ற பகுதிகளில் முளைக் கொட்டு திருவிழா நடந்தது. செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன்,முளை மாரியம்மன் போன்ற அம்மன் கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

    மதியம் முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக சென்றனர். அனைத்து கிராமங்கள் வழியாக அனைத்து தெருக்களும் சுற்றி முளைப்பாரிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் அருகே உள்ள கிணற்றில் மாலை வரை முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு அனைத்து மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தொகுப்பு வீடுகள் பராமரிப்பு சாத்தூர் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரம், குறிச்சியார்பட்டி பகுதிகள் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப்பகுதியில் சுமார் 35 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அந்தப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ஆய்வு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், குறிச்சியார்பட்டி பஞ்சாயத்தில் 4 வீடுகளுக்கும், கோபாலபுரம் பஞ்சாயத்தில் 21 வீடுகளுக்கும் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடுகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஜெயக்குமார், குறிச்சியார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராஜ், ஒன்றிய பணி குழு மேற்பார்வளர்கள் கண்ணன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அகழாய்வில் வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.
    • கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட்கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்பு சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்பட்ட பதக்கம், புகைக்கும் குழாய், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுனுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட அழகிய ஆண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொம்மையின் தலை கிடைக்கவில்லை. இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த பொருட்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் கண்டறியப் படுவது இந்த பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    • யோகா போட்டியில் வைமா வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    ராஜபாளையம்

    மாநில அளவிலான யோகாசனப்போட்டி சாத்தூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 458 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் இருந்து 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    கிருஷ்ணசாமி கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் கண்ணன் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி சேர்மன் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு யோகா செய்து காட்டிய மாணவர்களைப் பாராட்டி வைமா வித்யாலயாவிற்கு "சாம்பியன் ஆப் சாம்பியன்" பட்டத்தை வழங்கினர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் கேடயமும், பரிசும் பெற்ற மாணவர்களைப் பாரா ட்டினர்.

    மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த யோகக் கலை பயிற்றுநர் இசக்கி முத்து மற்றும் ஆசிரியைகள் முத்துமாரி, ராமராதா, ராஜலட்சுமி, கீதாஞ்சலி, முத்துமணி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

    • கைப்பந்து போட்டியில் சென்னை-கோவை அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றது.
    • பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    21 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்த 420 ஆண்கள் மற்றும் 26 அணிகள் கலந்து கொண்டன.ராம்கோ ஊர்காவல் படை மைதானம் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள 5 ஆட்டக் களங்களில் 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடந்தன. லீக் முறையில் ஆண்களுக்கு 60 போட்டிகளும், பெண்களுக்கு 34 போட்டிகளும் நடந்தது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை அணியினர் 3 - 0 என்ற நேர் செட் கணக்கில் சேலம் அணியினரை வென்று முதலிடம் பிடித்தனர். 2-ம் இடத்தை சேலம் அணியினரும், 3 -ம் இடத்தை கிருஷ்ணகிரியும், 4-ம் இடத்தை மதுரை அணியினரும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கோவை அணியினர் 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியினரை தோற்கடித்தனர். சேலம் அணியினர் 3-வது இடத்தையும், தூத்துக்குடி அணியினர் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

    இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த அணியினருக்கு பரிசுக்கோப்பையுடன், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    • கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தலையால் நடந்தாள் குளத்தை சேர்ந்த முருகன் பூசாரி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி கோவிலுக்கு பாதையாத்திரையாக வந்தனர்.

    அவர்கள் இன்று காலை சாத்தூர் அருகே தோட்டிலோவன்பட்டி அருகே நடந்து வந்தனர். அப்போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி (வயது 65) என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியான சரஸ்வதி உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34-வது சங்க அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி ராஜு தலைமை தாங்கினார். சங்க கொடியை மாநில துணைத் தலைவர் மாரியப்பன் ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் குருசாமி அமைப்பு தினப் பேருரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    • மகளுடன் ஆசிரியை மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாட்டு வீராங்கனை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி பள்ளப்ப ட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகள் தங்கபாண்டியம்மாள் (18). கல்லூரி மாணவியான இவர் ஜூடோ விளையாட்டு வீராங்கனை ஆவார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கபாண்டியம்மாள் விளையாடி உள்ளார். திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பெற்றோர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த தங்கபாண்டியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள வீரநல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (60). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் அந்ேதாணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய புஷ்பா (50). வடபட்டி நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய புஷ்பா சம்பவத்தன்று இரவு கத்தியால் உடலில் கீறிக்கொண்டு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×