என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
    • கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரைதேசிய கொடியை முகப்புப்படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    சிவகாசி

    75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல், இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தேசியக் கொடி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    சுதந்திர தின விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டில் இன்று காலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன். சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தேசியகொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.
    • இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின்75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு உத்தரவுகளின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசியகொடிையஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் 7402608260 மற்றும் 04562-252765 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தேசியகொடியை அவ மதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியை நகரசபை துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் பங்கேற்ற வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆண்டாள் கோவில் முன்பு, பேரணியை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை முன்னிலை வகித்தனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் வரவேற்றார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் ஆண்டாள் சன்னதியை அடைந்தது. இதில் 11 குறுவள மையங்களைச் சேர்ந்த சுமார் 300 தன்னார்வலர்கள் சீருடை அணிந்து, தேசியக் கொடியை ஏந்தி அணிவகுத்து வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா தமிழ் வழி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர்11குறுவளமையதன்னார் ஒருங்கிணைப்பா–ளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்கள் லாவண்யாதேவி, சூர்யா, சித்ரா, நிரோஷா, அமுதவல்லி, சுமதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    • நாடார் மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • ராஜபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ண மராஜ பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ப்ரித்தி முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாணவ, மாணவியர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் விஜயராஜன், உறவின் முறை தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் பாரத், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாத்தா பெரியண்ணன், மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
    • சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி கிராமத்தில் 5 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அலுவலர் ஞானம் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவரது தாத்தா பெரியண்ணன், மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை சிறுமி குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தாள். இது குறித்து அவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை கொடுத்த பெரியண்ணன், சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர் புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    அதன் பிறகு சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்திருந்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • 2 பெண்கள் திடீர் மரணம் அடைந்தனர்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாரைபட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அல்போன்சா (வயது 42). இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்து இங்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அல்ேபான்சாவுக்கு உடல்நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவர் குடும்பத்துடன் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். சம்பவத்தன்று முத்துலட்சுமி திடீரென இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய வேலம்மாள் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது பணியை கருணை அடிப்படையில் வழங்குமாறு மகள் சீனியம்மாள் மனு செய்தார். இந்த நிலையில் சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சீனியம்மாளின் மகனிடம் பேசும் அதிகாரி ரூ. 15 ஆயிரம் கொடுத்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலக அதிகாரியே லஞ்சம் கேட்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் பெரிகடை பஜாரை சேர்ந்தவர் காசிராஜா (45). தனியாக வசித்து வந்த இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் காசிராஜா வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை பெரியகட்டங்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி (75). நோய் பாதிப்பு கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கீழ திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (25), பட்டாசு தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த மாரீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • சிவகாசியில் பட்டாசு வணிகர்கள் மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது.
    • மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் உள்ள ஜா போஸ் திருமண மண்டபத்தில் நாளை மறுதினம் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகிக்கிறார், மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் விவேகானந்தன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கணேசன், அகில இந்திய பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜொன்னடா மாணிக்ராவ் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் தி இந்தியன் பட்டாசு உற்பத்தி அலுவலக சங்கத் தலைவர் ஸ்ரீராம் அசோக், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி, தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காத்தலிங்கம், சிவகாசி கம்பி மத்தாப்பு உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகசாமி, கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன், நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

    • கோவிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அன்னலட்சுமி புரத்தில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த இருதரப்பினர் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அன்னலட்சுமிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மற்றொரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்து ஜெயராமனின் மகன் ராமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த இருளாயி, குமுதம், பவித்ரா, பானுமதி, முருகேசன், மலைசாமி, பூமிநாதன், சந்திரன், அழகர்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கமுதி, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வழக்குப்பதிவு

    இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின்பேரில் 18-ம் படியான் , சிவகுமார்,வடிவேல், விக்னேஷ்வரன், அஜித்குமார், பூரணம் உள்பட 8 பேர் மீது வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏதேனும் அசம்பாவிகள் நடக்கும் முன் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • போதைப் பொருட்கள் தடுப்பு-ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை கலை அரங்கத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகர், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொ ருட்கள் ஒழிப்பு உறுதி மொழியினை அமைச்சர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சப்.கலெக்டர் (சிவகாசி) பிருத்திவிராஜ், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், முன்னாள் அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜா, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், சாத்தூர் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, அருப்புக்கோ ட்டை வருவாய் கோட்டா ட்சியர் கல்யாணகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×