என் மலர்
விருதுநகர்
- பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும் செயலரியல் துறை மற்றும் சட்ட விழிப்புணர்வுக் கழகம், சிவகாசி இன்னர் வீல் கிளப்புடன் இணைந்து ''பெண்களின் சட்ட உரிமைகள்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை நடத்தியது.
வழக்கறிஞர் கார்த்தீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்களுக்கான மிக முக்கிய சட்ட உரிமைகளை விளக்கினார். உடல் ரீதியாகவோ அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பின்தொடரும் மற்றும் தொடர்பு கொள்ளும் ஆணுக்கு எதிராகவோ புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்றார்.
துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். சட்ட விழிப்புணர்வுக் கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை
சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் சிவகங்கைதொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 43 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.
- இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது.
- குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மழைநீர் மூலம் இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வருடத்தில் பெரும்பாலான நாட்களில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்த குளத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் இந்த குளத்தில் குளிக்க செல்வோர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி இறப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் திருமுக்குளத்துக்கு சென்றனர். அப்போது தண்ணீரில் 2 பெண்களின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 2 பெண்களின் உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தாய்-மகளா? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இறந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டி தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி மகாலட்சுமி (வயது 50), அவரது மகள் அங்காள ஈஸ்வரி (14) என தெரிய வந்தது. இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.
- பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சிவகாசியில் நடந்த பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடந்தது. மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி, ராஜன் முன்னிலை வகித்தனர்.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி வரவேற்றார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், டான்பாமா சங்கத்தலைவர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காலத்திற்கு ஏற்றவாறு பட்டாசு உற்பத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதால் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசி தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கி வருகிறது. சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து இந்த தொழில் சிறப்பாக செயல்படுவதற்கு சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர்களே காரணம் ஆவார்கள். பட்டாசு உற்பத்தி, பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.
மாநாட்டு மலரை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் வெளியிட, மாணிக்கம் தாகூர் எம்.பி. பெற்றுக்கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் பேசுகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து அதிகாரிகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்வரவில்லை.
உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் முதலில் தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதி செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது இலங்கை யில் உள்ள கொழும்பு துறைமுகம் வழியாக பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்குவது, விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் வழங்குவது, தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிப்பது, பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
- 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடியை ஏற்றினார்.
- ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது சுதந்திரதின விழா இன்று காலை நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய 179 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்ப ட்டது. மேலும் 3 பயனாளி களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சுதந்திர தின தியாகிகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், சமூக சேகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், அவரது அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ், யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர், வட்டார அலுவலகத்தில் சாந்தி போத்திராஜ், நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடியேற்றி வைத்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்த லைவர் தனலட்சுமி, கமி ஷனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நீதிபதிகள் சிந்துமதி, கவிதா, ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடியே ஏற்றி 75-வது சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் நாராணயன மடம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 62). இவர் ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் ரவீந்திரன் சிக்கினார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முடிந்தது.
கால் ஊனமானதன் காரணமாக ரவீந்திரன் வேலை பார்க்க முடியவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். விபத்தில் ஏற்பட்ட ஊனத்தால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரவீந்திரன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ரவீந்திரன் விருதுநகரில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு நடந்து சென்றார். அங்குள்ள மின்கம்பம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலத்தில் உள்ள மின்கம்பத்தில் ரவீந்திரன் பிணமாக தொங்குவதை இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் கால் ஊனமாகி வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாழ்வில் விரக்தி ஏற்பட்டு ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் 2 கிராமங்களில் வீடு, வீடாக தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
- ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிக வியல் துறையின் விரிவாக்க பணி சார்பில் "இல்லம் தோறும் தேசிய கொடி" என்ற நிகழ்ச்சி அ.மீனாட்சிபுரம் மற்றும் ஆணைக்குட்டம் கிராமங்களில் நடந்தது.
75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையிலும், தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவை நினைவு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட 2 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளி லும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.
730-க்கும் அதிகமான வீடுகள் உள்ள இந்த கிராமங்களில் இல்லம் தோறும் தேசிய கொடி என்ற நிகழ்ச்சி கிராம மக்களிடையே பெரும் வர வேற்பை ஏற்படுத்தியது.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கொடிகளை மாண வர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறை பேராசிரியர்களும் தன்னார்வமாக இந்த நிகழ்ச்சியை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.
- விருதுநகர் மாவட்டத்தில் பொட்டல பொருட்களை கூடுதல் விலைக்கு விற்ற 16 வியாபாரிகள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை தொழிலா ளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி யும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துைண ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் சோதனை நடத்தினர்.
அப்போது பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள், அறிவிப்பு இல்லாமல் பொட்டலபொருட்களை விற்பனைசெய்தல் மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக இந்த சோதனை நடந்தது.
பொட்டல பொருட்க ளில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 13 வியாபாரிகள் மீதும், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள் பதிவு சான்று பெறாமல் உள்ள 2 வியாபாரிகள் மீதும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்த ஒரு வியாபாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் முதலாவது குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராமும், அதற்கு மேற்பட்ட குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
இந்த சோதனையில் சிவ காசி தொழிலாளர் துைண ஆய்வாளர்கள் முத்து, சதாசிவம் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
- மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
75 - வந்து இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாத யாத்திரை நடந்தது.
இந்திரா நகர் தொடங்கி மதுரை சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, சின்னக்கடை பஜார், ஆத்துக்கடைத் தெரு, மேற்கு ரதவீதியில் உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வடக்கு ரதவீதி வழியாக சென்று நகராட்சி உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், நகரத் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் பாலகுருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் காளீஸ்வரி, ஆர்.டி.ஐ. மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், ஆர்.டி.ஐ.மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். துள்ளுக்குட்டி நன்றி கூறினார்.
- இடையன்குளம் கிராமத்தில் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பள்ளிக் கல்வி துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவைக் குறிக்கும் வகையில் வீடுதோறும் தேசிய கொடி வைக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது.
இடையன்குளம் கிராமத்தில் சுமார் 650 குடியிருப்பு உள்ளது. இங்கு 5 இ்ல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 140 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.
தன்னார்வலர்கள் சித்ரா, மதனா, மனோன்மரியா, லதாபிரியா, சந்திராஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய கொடி ஏந்தி கிராமத்தின் தெருக்களின் வழியே வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை மாணவர்கள் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடி வைக்கப்பட்டது.
பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள திருமலாபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர் மீனாட்சி தலைமையில் மாணவ- மாணவிகள் தேசிய கொடியேந்தி வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.
நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் , ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் வடக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய அவை தலைவர்-சிவா னந்தம், செயலாளர்- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., பொருளாளர்-பால்பாண்டி. வடக்கு ஒன்றிய அவை தலைவர்-சங்கர்ராஜ், செயலாளர் ஆவுடை யம்மாள், பொருளாளர்-ரவிக்குமார்.சிவகாசி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-கதிரேசன், செயலாளர்-தங்கராசா, பொருளாளர்-அண்ணாமலை.
சிவகாசி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சாகுல்அமீது, செயலாளர்-விவேகன்ராஜ், பொருளாளர்-செல்வம். சிவகாசி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-சுப்பராஜ், செயலாளர்கோபிகண் ணன், பொருளாளர்-முத்துராஜ்.
திருச்சுழி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகன், செயலாளர்- சந்தன பாண்டியன், பொருளாளர்-சாமிகண்ணு. திருச்சுழி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சம்சுதீன், செயலாளர்-பொன்னுச்சாமி, பொருளாளர்-முத்து.
நரிக்குடி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-ஆண்டி மூப்பன், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-மகாலிங்கம். நரிக்குடி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-தியாகராஜன், செயலாளர்-போஸ், பொருளாளர்-கோபாலகிருஷ்ணன்.
காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-மகேந்திரசாமி, செயலாளர்-செல்வம், பொருளாளர்-அழகுமலை. காரியாபட்டிமேற்கு ஒன்றிய அவை தலைவர்-ரமேஷ், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-ஜெயசூரியன்.
விருதுநகர் தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-அல்ேபான்ஸ்ராஜ், செயலாளர்-செல்லப்பாண்டியன், பொருளாளர்-அழகர்சாமி. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகர்சாமி, செயலாளர்-பொன்ராஜ், பொருளாளர்-பிரேம்குமார்.
அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அவை தலைவர்-கே.வி.கே.ஆர்.பிரபாகரன், செயலாளர்-பாலகணேசன், பொருளாளர்-உதயசூரியன்.
சாத்தூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-ராஜூ, செயலாளர்-முருகேசன், பொருளாளர்-காசிராஜன். சாத்தூர் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-தர்மராஜ், செயலாளர்-கடற்கரைராஜ், பொருளாளர்-முத்துவேல் பாண்டியன்.
ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-குருசாமி, செயலாளர்-சரவணமுருகன், பொருளாளர்-விவேகானந்தன். ராஜபளையம் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-நடராஜன், செயலாளர்-தங்கப்பாண்டி, பொருளாளர்-ஜஸ்டின் சவுரிராஜ்.
ராஜபளையம் தெற்கு ஒன்றிய அவை தலைவர்-முருகேசன், செயலாளர்-ஞானராஜ், பொருளாளர்-ராமகிருஷ்ணன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அவை தலைவர்-காளிதாசன், செயலாளர்-ஆறுமுகம், பொருளாளர்-முருகன்.
வத்திராயிருப்பு ஒன்றிய அவை தலைவர்-கண்ணன், செயலாளர்-முனியாண்டி, பொருளாளர்-மதிவாணன். வெம்பக்கோட்டை ஒன்றிய அவை தலைவர்-புஷ்பராஜ், செயலாளர்-கிருஷ்ணகுமார், பொருளாளர்-செல்வராஜ்.
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர்-திருப்பதி, செயலாளர்-ஜெயபாண்டியன், பொரு ளாளர்-விவேகானந்தன்.
மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இேத போல துணைச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- பி.எஸ்.ஆர்.கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் நடத்தப்பட்டது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி தாலாளர் சோலை சாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி-அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் டீன் மாரிச்சாமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்காக ஏற்பாடுகளை பேராசிரியர் துர்கை ஈஸ்வரன் செய்திருந்தார். பேராசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.






