search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுதோறும் தேசிய கொடி
    X

    வீடுதோறும் தேசிய கொடி

    • இடையன்குளம் கிராமத்தில் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பள்ளிக் கல்வி துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தின நிறைவைக் குறிக்கும் வகையில் வீடுதோறும் தேசிய கொடி வைக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்தது.

    இடையன்குளம் கிராமத்தில் சுமார் 650 குடியிருப்பு உள்ளது. இங்கு 5 இ்ல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 140 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.

    தன்னார்வலர்கள் சித்ரா, மதனா, மனோன்மரியா, லதாபிரியா, சந்திராஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய கொடி ஏந்தி கிராமத்தின் தெருக்களின் வழியே வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை மாணவர்கள் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடி வைக்கப்பட்டது.

    பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள திருமலாபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர் மீனாட்சி தலைமையில் மாணவ- மாணவிகள் தேசிய கொடியேந்தி வீடுதோறும் தேசிய கொடியை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் , ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

    Next Story
    ×