விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.
விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
Published on

சிவகங்கை

சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் சிவகங்கைதொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 43 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com