search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flags"

    • பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
    • கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை இ.பி.எப். பென்ஷனர்கள் நலச் சங்கம் சார்பில் முதலியார்பேட்டை தபால்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமலிங்கம், வேலாயுதம், செல்வராஜ், அவணியப்பன், நடராஜன், பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இ.பி.எப். பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

    பென்சனர்களின் கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    • கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
    • 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    இதற்கு காரணமான மத்திய மந்திரியை பதவியி லிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 3-ந் தேதியை கறுப்பு தினமாக கடைபிடிக்க அகில இந்திய தொழிற்சங்க தலைவர்கள் முடிவெடுத்தனர்.

    இந்த முடிவின்படி புதுவையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலா ளர் சேது செல்வம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ் பொன்னையா, அபிஷேகம், சி.ஐ.டி.யூ. சீனிவாசன், பிரபுராஜ், ஐ.என்.டி.யூ.சி. பாலாஜி, ஞானசேகரன்,

    ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், எல்.எல்.எப். செந்தில், எல்.எல்.எப்.வேணு கோபால், மாசிலாமணி, என். டி. எல். எப். மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய சங்கங்க ளின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்புசட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற னர். மத்திய அரசு விவசாயி கள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை கண்டித்தும், கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் 2 கிராமங்களில் வீடு, வீடாக தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
    • ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிக வியல் துறையின் விரிவாக்க பணி சார்பில் "இல்லம் தோறும் தேசிய கொடி" என்ற நிகழ்ச்சி அ.மீனாட்சிபுரம் மற்றும் ஆணைக்குட்டம் கிராமங்களில் நடந்தது.

    75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையிலும், தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவை நினைவு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட 2 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளி லும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.

    730-க்கும் அதிகமான வீடுகள் உள்ள இந்த கிராமங்களில் இல்லம் தோறும் தேசிய கொடி என்ற நிகழ்ச்சி கிராம மக்களிடையே பெரும் வர வேற்பை ஏற்படுத்தியது.

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கொடிகளை மாண வர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறை பேராசிரியர்களும் தன்னார்வமாக இந்த நிகழ்ச்சியை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கி ளின் செய்திருந்தார்.

    மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வணிக வளாகங்களிலும், வீதிகளிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்து வருகின்றனர்.

    சி.என். கிராமம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவிலிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் உள்ள தேவாலயம்,அதனை சுற்றியுள்ள வளாகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது. #MadhyaPradesh #FakeVoters
    புதுடெல்லி:

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

    எனவே இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த போலி வாக்காளர் பட்டியலையும் அவரிடம் ஒப்படைத்த காங்கிரசார், அதை மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

    தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும், போலி வாக்காளர்களை சேர்க்க உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர்கள், இத்தகைய அதிகாரிகளுக்கு, அடுத்த 6 முதல் 10 ஆண்டுகள் வரை தேர்தல் பணிகளில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    இந்த மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பதற்கான ஆதாரத்தை தேர்தல் கமிஷனில் அளித்து இருக்கிறோம். இந்த பெயர்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதேயன்றி, தொழில்நுட்ப தவறு அல்ல.

    மாநில அரசு தனது சொந்த லாபத்துக்காக இத்தகைய கீழ்த்தரமான செயல்களை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருகிறது. 10 ஆண்டுகளில் 24 சதவீதமே மக்கள் தொகை அதிகரித்து இருக்கும் நிலையில், வாக்காளர் எண்ணிக்கை மட்டும் எப்படி 40 சதவீதம் அதிகரிக்கும்?

    எனவே இந்த வாக்காளர் பட்டியலை அங்கீகரித்த ஒவ்வொரு அதிகாரியிடம் இருந்தும் அறிக்கை பெற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அத்துடன் மத்திய பிரதேசத்தின் அண்டை மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டோம்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    காங்கிரசாரின் புகாரை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 குழுக்களை மத்திய பிரதேசத்துக்கு தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்தது. போலி வாக்காளர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தும் இந்த குழுவினர், தங்கள் அறிக்கையை 7-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.  #MadhyaPradesh #FakeVoters
    ×