என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லை சந்திப்பில் வீடுகள்,கோவில்களில் பறக்கும் தேசிய கொடிகள்
  X

  நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

  நெல்லை சந்திப்பில் வீடுகள்,கோவில்களில் பறக்கும் தேசிய கொடிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  நெல்லை:

  இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வணிக வளாகங்களிலும், வீதிகளிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்து வருகின்றனர்.

  சி.என். கிராமம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவிலிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் உள்ள தேவாலயம்,அதனை சுற்றியுள்ள வளாகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×