என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள், பதாகைகளை அகற்ற வேண்டும்
- இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
- கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், அனுமதி இன்றியும் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், வளைவுகள், மன்றங்கள், எட்டாத உயரத்தில் இருக்கும் கட்சிக்கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






