search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
    X

    தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    புதுவை தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

    • புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
    • 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    இதற்கு காரணமான மத்திய மந்திரியை பதவியி லிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 3-ந் தேதியை கறுப்பு தினமாக கடைபிடிக்க அகில இந்திய தொழிற்சங்க தலைவர்கள் முடிவெடுத்தனர்.

    இந்த முடிவின்படி புதுவையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலா ளர் சேது செல்வம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ் பொன்னையா, அபிஷேகம், சி.ஐ.டி.யூ. சீனிவாசன், பிரபுராஜ், ஐ.என்.டி.யூ.சி. பாலாஜி, ஞானசேகரன்,

    ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், எல்.எல்.எப். செந்தில், எல்.எல்.எப்.வேணு கோபால், மாசிலாமணி, என். டி. எல். எப். மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய சங்கங்க ளின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்புசட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற னர். மத்திய அரசு விவசாயி கள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை கண்டித்தும், கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×