ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை

ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை
Published on

சிவகாசி

சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவுன்சிலர்கள் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், தினசரி பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கே வந்து வாறுகால் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வர வில்லை, சாலை வசதி இல்லை என்ற அடிப்படை வசதிகள் குறித்து எங்களிடம் முறையிட்டு வருகின்றனர் என்றனர்.

மேலும் இதை மாமன்ற கூட்டத்தில் பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பணிகளை செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து அனைவரின் குறைகளும் நிவர்த்தி செய்து அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்ப டம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com