என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.
இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
- 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
- இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தாவீது நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். பாதிரியாரான இவர் செம்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டில் ஜெபகூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த அருப்புக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ்குமார், பூலோகராஜா மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக சுரேஷ்குமார் மற்றும் ஜோஸ்வா கண்ணன் ஆகிய இரு தரப்பினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்ததால் முத்துபாண்டி உடனான பழக்கத்தை அந்த பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
- கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
- கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.
இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காளியம்மன் கோவில்
ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை.
போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த நேரம் மோட்டார் பழுதானதால் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவை களுக்கும் தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டம் முடிந்த பின் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
- வாலிபரிடம் ரூ.15லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டை நகராட்சி பெண் ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் முதல் தெரு வெள்ளைக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரகுராம். இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ரகுராமின் மாமியார் உத்தரகுமாரியும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணிபுரியும் லட்சுமிதேவி என்பவரும் ஏற்கனவே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் ரகுராம் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை தெரிந்து கொண்ட லட்சுமிதேவி உத்திரகுமாரியிடம், உங்கள் மருமகனுக்கு எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சென்னை தலைமை செய லகத்தில் வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு பணம் செலவாகும் என்று கூறி உள்ளார். அதை உத்திர குமாரி நம்பியதை தொடர்ந்து அவருக்கு நெல்லையை சேர்ந்த வெள்ளத்துரையை லட்சுமி தேவி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
வெள்ளைத்துரை நாகர்கோவிலுக்கு ரகு ராமை அழைத்துச் சென்று டேனியல் என்பவரிடம் இவர் நமது புரோக்கர் லட்சுமிதேவிக்கு மிகவும் வேண்டியவர் என்று தெரிவித்து அவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுப்பார் என கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து டேனியல் ரகுராமுக்கும், அவரது தம்பிக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என தெரிவித்து ரூ.15 லட்சம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டேனியல் வங்கி கணக்கில் ரகுராம் ரூ.7 லட்சம் செலுத்தி உள்ளார். மேலும் நகையை அடகு வைத்து ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னப் படி வேலை வாங்கி கொடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து ரகுராம், டேனியல் அலுவலகத்துக்கு சென்று தான் அனுப்பிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அப்போது டேனியல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
டேனியல் ரகுராமிடம் 2 காசோலைகளை கொடுத்துள்ளார். அதனை வாங்கியில் போட்டபோது அதில் பணம் இல்லை என்று திரும்பிவந்துவிட்டது. இதுதொடர்பாக ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தர விட்டார். அதன்பேரில் டேனியல், வெள்ளைத்துரை, லட்சுமி தேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (38). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முத்துலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரி வீட்டில் இருந்த முத்துலட்சுமியை தாக்கி கனகராஜ் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் அவரது மகள் தீக்காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த பின் மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அதில் கனகராஜுற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
- கிராம நிர்வாக அதிகாரி கேசவன் போலீசில் புகார் செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்த நாயக்கன்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விருதுநகர்- காரைக்குடி பயணிகள் ரெயிலை அந்த வாலிபர் கவனிக்கவில்லை.
இதன் காரணமாக ரெயில் மோதியதில் அந்த வாலிபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சென்னிலைக்குடி கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? விபத்தா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
- சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.
இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளி கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்க ளது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதனை பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.






