அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி

நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார். சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட  விவசாயி முனியசாமி.
பாதிக்கப்பட்ட விவசாயி முனியசாமி.
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com