வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
நரிக்குடி பகுதியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
நரிக்குடி பகுதியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.

இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com