என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், 26-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப் பட்டியில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது பொதுமக்களி டையே மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான 40 வயதிற்கு மேற்பட்ட வர்களை பரிசோதனை செய்ய வசதியாக அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் சுமார் 40ஆயிரம் பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவற்றை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில்ம் இருதயம், கண், சிறுநீரக உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புக்கும் அளவிற்கான விளைவுகள் உள்ளது.

    எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், இது போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நட்பை துண்டித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை என மணிகண்டனிடம் பாண்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் மணிகண்டபெருமாள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டினர். இதில் அவருக்கு உச்சந்தலையில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டபெருமாளும், பாண்டியும் தப்பி சென்றனர். மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55), தச்சு வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று வேலை நிமிர்த்த மாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ராஜேந்திரன் அங்குள்ள நகராட்சி கழிவறை அருகே மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அவரது ஆலோசனையின் பேரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், செந்தலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    • சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீரவேல். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி புவனேசுவரி மகன் லிவின்ஷாவுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த வீரவேல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வீரவேல் அரிவாளால் மனைவியை வெட்ட வந்தார். அப்போது அங்கிருந்து மகன் லிவின்ஷா, புவனேசுவரியின் சகோதரர் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேருக்கும் வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது. இது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை தேடி வருகின்றனர்.

    • 3 குல தெய்வ கோவில்களில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை தலைமை யாக கொண்ட 56 கிராமங் களை சேர்ந்த ஒரே சமு தாயத்தை சேர்ந்த மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி 215 மாட்டுவண்டி களில் குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் சிவ காசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கூட முடையார்அய்யனார் கோவிலுக்கும், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லி வீரகாளியம்மன் கோவிலுக்கும், ராஜபாளை யம் அருகே கீழராஜகுல ராமன் கிராமத்தில் உள்ள பொன் இருளப்பசுவாமி கோவிலுக்கும் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    56 கிராம மக்களும் குல தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வருகிற 27-ந்தேதி ஒரே இடத்தில் சந்தித்து அங்கு கிடா வெட்டி விருந்து வைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

    அதனை தொடர்ந்து 28-ந் தேதி தாங்கள் சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வருகிற 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் வழங்கப்படும் மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளின் எடை அளவுகள் குறைவாக இருப்பதாக பொதுமக்களி டம் இருந்து மாவட்ட தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறையின் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் வீரசோழன் பகுதிகளில் உள்ள மீன், கோழி, மட்டன் கடைகளில் தொழிலாளர் துறை ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் தலைமையி லான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தராசுகளில் சரியான அளவு காட்டுகிறதா? என சோதனையிட்ட அதிகாரி கள் தாங்கள் கொண்டு வந்த எடைக்கற்கள் தராசு களில் வைத்து அளவுகளை சரிபார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கடைக்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் கடைகளில் வழங்கப்படும் இறைச்சியின் எடை சரியான அளவில் இருக்கி றதா? என்றும் விசாரித்தனர்.10-க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையின்போது சில இறைச்சி கடைகளில் தராசுகள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. காலாவதி யான எலக்ட்ரானிக் தராசு, எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×