என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் குழந்தைகள் தற்கொலை"

    • கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
    • கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (வயது30) இவர்களது மகள்கள் நிஷா(6), அர்ச்சனா தேவி(3).

    கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் ராமுதாய் நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ராமுதாய் தனது குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துக்குமார் கடந்த 22-ஆம் தேதி ராமு தாயின் தந்தை தங்கச்சாமிக்கு போன் செய்து ராமுதாய் மற்றும் குழந்தைகள் அங்கு வந்தார்களா? என கேட்டுள்ளார்.

    உடனே தங்கசாமி அங்கு என்ன நடந்தது? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துக்குமார் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வெளியில் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று காலை தேவதானம் அருகே முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராமு தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களது உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக ராமுதாயின் தந்தை தங்கசாமி கொடுத்துள்ள புகாரில் முத்துக்குமார் தனது மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×