என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது
- திருச்சுழியில் ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது.
- மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சென்னிலைகுடி, புலிக்குறிச்சி, விடத்தக்குளம் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 28 வருவாய் மற்றும் கூடுதல் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதில் தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






